காற்றில் பறந்த பாதுகாப்பு விதிமுறைகள்: செல்லூர் ராஜூவை வரவேற்க திரண்ட கூட்டம்!
Chennai: கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய அமைச்சர் செல்லூர் ராஜூவை வரவேற்க ஏராளமான அதிமுக தொண்டர்கள் முகக்கவசமும் அணியாமல் குவிந்தனர். இதனால், கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் என்பது அங்கு பெரும் கேள்வியானது.
கொரோனா வைரஸ் பரவை தடுக்க சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்ற முக்கிய விதிமுறைகளை புறக்கணித்து அதிமுக ஆதரவாளர்கள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவை வரவேற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பான வீடியோவில், காவல்துறையினரும், கட்சி பிரமுகர்களும், அமைச்சருடன் பாதுகாப்புக்கு வருகின்றனர். அவர்கள் தொண்டர்கள் அமைச்சரை நெருங்க விடாமல் பாதுகாத்து வருகின்றனர். எனினும், அமைச்சரின் வாகனம் வரும் போது, ஆதரவாளர்கள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி வீதிகளில் பட்டாசு வெடித்து வரவேற்றனர்.
முன்னதாக, அமைச்சர் செல்லூர் ராஜூ விரைந்து குணமடைய வேண்டும் என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்த வாழ்த்தில், மக்கள் தங்களது பணிகளை மேற்கொள்ளும் போது அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
கடந்த ஜூலை 10ம் தேதியன்று, அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசில் செல்லூர் ராஜூ கொரோனா பாதிக்கப்பட்ட மூன்றாவது அமைச்சர் ஆவார். தமிழகத்தில் இதுவரை பத்து எம்எல்ஏக்கள் வரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில், அண்மையில் திமுக எம்எல்ஏ பழக்கடை ஜெ.அன்பழகன் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அப்போது, அவரது இறுதி அஞ்சலியின் போதும், சமூக இடைவெளியை சமரசம் செய்து கொண்டு சில நூறு பேர் கூடியிருந்தனர்.
நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள இரண்டாவது மாநிலமாக தமிழகம் உள்ளது. நேற்றைய தினம் மட்டும், தமிழகத்தில் 5,864 பேருக்கு புதிதாக நோய் தொற்று ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 57,962 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தமாக 3,838 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.