This Article is From Apr 04, 2020

பிரதமர் விஷயத்தில் நான் ஏன் மூக்கை நுழைக்க வேண்டும் - மம்தா பானர்ஜி

"பிரதமரின் விஷயத்தில் நான் ஏன் மூக்கை நுழைக்க வேண்டும்" என்று பானர்ஜி கூறியுள்ளார்

பிரதமர் விஷயத்தில் நான் ஏன் மூக்கை நுழைக்க வேண்டும் - மம்தா பானர்ஜி

நான் கொரோனாவை கவனிக்க வேண்டுமா, அல்லது நான் அரசியல் செய்ய வேண்டுமா?

ஹைலைட்ஸ்

  • நான் கொரோனாவை கவனிக்க வேண்டுமா, அல்லது நான்
  • அடிக்கடி மோடியை கடுமையாக விமர்சிக்கும் மேற்கு வங்க முதல்வர்
  • "விளக்குகளை அணைத்து விட்டு பால்கனிக்கு வரவேண்டுமா ?
Kolkata:

கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் இந்த நிலையில் நேற்று காலை மக்களிடம் பேசிய பிரதமர் மோடி, இந்த இக்கட்டான சூழலில் நமது ஒற்றுமையை நிரூபிக்க வரும் ஏப்ரல் 5ம் தேதி அனைவரும் இரவு 9 நிமிடங்கள் தங்கள் வீடுகளில் உள்ள மின் விளக்குகளை அணைத்துவிட்டு தீபங்களை ஏற்றி வைக்குமாறும். டார்ச் லைட்டுகளை ஒளிரவிடுமாறும் கேட்டுக்கொண்டார். பிரதமரின் இந்த அறிவிப்பினை மம்தா பானர்ஜியின் கட்சியான திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த சில தலைவர்கள் விமர்சித்துள்ளனர். ஆனால் அடிக்கடி மோடியை கடுமையாக விமர்சிக்கும் மேற்கு வங்க முதல்வர், தற்போது நிதானத்துடன் பதிலளித்துள்ளார். 

மக்களிடம் பிரதமர் வைத்த இந்த கோரிக்கைக்கு "பிரதமரின் விஷயத்தில் நான் ஏன் மூக்கை நுழைக்க வேண்டும்" என்று பானர்ஜி கூறியுள்ளார். திருமதி பானர்ஜி இந்த நிகழ்வை அரசியல் நோக்கத்தோடு அணுக மறுத்து, அதற்கு பதிலாக, கொரோனா வைரஸ் நெருக்கடியைச் சமாளிப்பதில் தனது கவனத்தை வலுப்படுத்தியுள்ளார்."நான் கொரோனாவை கவனிக்க வேண்டுமா, அல்லது நான் அரசியல் செய்ய வேண்டுமா? நீங்கள் ஏன் ஒரு அரசியல் போரைத் தொடக்க விரும்புகிறீர்கள் ? தயவுசெய்து ஒரு அரசியல் போரைத் தொடக்காதீர்கள்" என்று அவர் கூறினார்.

பிரதமர் மோடியின் யோசனையை விரும்புவோர் அவருடைய அழைப்புக்கு பதிலளிக்க வேண்டும் என்றும், "நான் தூங்க விரும்பினால், நான் தூங்குவேன். இது முற்றிலும் தனிப்பட்ட விஷயம்." என்றும் அவர் கூறினார். இந்திய நாட்டில் இதுவரை 62 பேர் இந்த கொரோனா காரணமாக இறந்துள்ள நிலையில் மோடியின் அறிக்கைக்கு பல திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி மீது கடுமையான விமர்சனத்தை வைத்துள்ள அக்கட்சி எம்.பி.யான மஹுவா மொய்த்ரா, 
"விளக்குகளை அணைத்து விட்டு பால்கனிக்கு வரவேண்டுமா ? உண்மை நிலைக்கு வாருங்கள் மோடி.! மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8-10 சதவிகிதம் மதிப்புள்ள இந்தியா நிதிப் பொதியைக் கொடுங்கள். இந்த ஊரடங்கினால் வாடும் கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் தினக்கூலி ஊழியர்களுக்கு உடனடி ஊதியத்தை உறுதி செய்யுங்கள்- சட்டங்களும் இதை அனுமதிக்கின்றன என்று கூறி," அவர் ட்வீட் செய்துள்ளார்.
 

பிரதமர் மோடியிடமிருந்து நாடு சில வழிகாட்டுதலை எதிர்பார்க்கிறது என்று வங்காள அமைச்சர் சுப்ரதா முகர்ஜி கூறினார். "விளக்குகளை ஏற்றினால் கொரோனா முடிவுக்கு வந்துவிடுமா," என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மாநிலத்தில் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான முயற்சிகளில் திரிணாமுலுக்கு ஐபிஏசி உதவி செய்யும் பிரசாந்த் கிஷோர், பிரதமரின் இந்த வேண்டுகோளுக்கு தனது பதிலை ட்வீட் செய்துள்ளார்

மேலும் பிரதமரின் இந்த வேண்டுகோள் குறித்து ட்வீட் செய்துள்ள பிரசாந்த் கிஷோர் "ஒற்றுமையை வெளிப்படுத்தும் மற்றும் கொரோனவை எதிர்த்துப் போராடுவதற்கான அனைத்து முயற்சிகளையும் நாம் பாராட்ட வேண்டும் என்றாலும், இதுபோன்ற விஷயங்கள் விஞ்ஞான சான்றுகள், தரவு மற்றும் சிறந்த தொழில்முறை அனுபவத்தால் வழிநடத்தப்படவேண்டும் என்று அவர் கூறினார்.
 

மத்திய அரசுடன் மம்தா பானர்ஜியின் பரிமாற்றங்கள் கடந்த சில வாரங்களாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வார தொடக்கத்தில் மம்தா ஒரு கடிதத்தில் இந்த இக்கட்டான சூழ்நிலையில் தேவையான நிதியை வெளியிடுமாறு மத்திய அரசைக் கேட்டார். திருமதி பானர்ஜி பிபிஇ போன்ற சுகாதார உபகரணங்களின் பற்றாக்குறை குறித்து புகார் கூறினார்.

.