This Article is From Jun 20, 2020

'தமிழக முதல்வருக்கு கொரோனா வராது... வந்தாலும் உடனே சரியாகி விடும்' - அமைச்சர் செல்லூர் ராஜூ

'' தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சக அமைச்சர்கள்  மீது அன்பும் பாசமும் வைத்துள்ளார்.  அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றபோது முதலில் என்னை கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கூறினார். ''

Advertisement
தமிழ்நாடு Posted by

மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் தமிழக முதல்வர் செயல்பட்டு வருகிறார் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.  பன்னீர் செல்வம் ஆகியோருக்கு கொரோனா வராது, அப்படி வந்தாலும் உடனே சரியாகி விடும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர்  செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

இதுதொடர்பாக மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தபோது அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது-

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சக அமைச்சர்கள்  மீது அன்பும் பாசமும் வைத்துள்ளார்.  அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றபோது முதலில் என்னை கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கூறினார். 

மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் தமிழக முதல்வர் செயல்பட்டு வருகிறார்.  

Advertisement

மக்கள் மீது அன்பும், பாசமும் வைத்திருக்கக் கூடிய முதல்வரையும், துணை முதல்வரையும் தமிழகம் பெற்றிருக்கிறது. மக்களின் ஆசியால் அவர்களுக்கெல்லாம் கொரோனா பாதிப்பு வராது. வந்தாலும் உடனே சரியாகி விடும். 

இவ்வாறு அவர் கூறினார்.  தமிழகத்தில் புதிதாக 2,115 பேருக்கு கொரோனா பாதிப்பு நேற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனால் மொத்த பாதிப்பு  54 ஆயிரத்து 449 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement

சென்னையில் மட்டும் 1,322 பேருக்கு  நேற்று  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 38 ஆயிரத்து 327 ஆக உயர்ந்துள்ளது. 

இதேபோன்று தமிழகத்தில் கொரோனா  பாதிப்பிலிருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை நேற்று தாண்டியது.

Advertisement

நேற்று மட்டும் 1,630 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளார்கள். தமிழகத்தில் குணம் பெற்றவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 271 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு மொத்தம் 666 பேர் உயிரிழந்துள்ளனர்.  

Advertisement