This Article is From Apr 03, 2020

கொரோனா தொற்றை சமாளிக்க இந்தியாவுக்கு 1 பில்லியன் டாலர் நிதியை வழங்குகிறது உலக வங்கி

1.9 பில்லியன் அமெரிக்க டாலர் உலக வங்கியின் மொத்த முதலுதவி நிதியானது 25 நாடுகளுக்கு உதவும் என்றும், 40 க்கும் மேற்பட்ட நாடுகள் இதனைக் கொண்டு புதிய முயற்சிகளில் முன்னேறி வருகின்றன என்றும் உலக வங்கி குறிப்பிட்டுள்ளது. இந்த அவசர நிதியில் பெரிய அளவு இந்தியாவுக்குக் கிடைத்துள்ளது.

கொரோனா தொற்றை சமாளிக்க இந்தியாவுக்கு 1 பில்லியன் டாலர் நிதியை வழங்குகிறது உலக வங்கி

உலக வங்கியின் அவசர உதவியின் பெரிய அளவில் நிதியானது இந்தியாவுக்கு கிடைத்துள்ளது

Washington:

சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் கிட்டதட்ட 9 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிப்படைந்திருக்கிறார்கள். 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களை இந்த தொற்று கொன்றிருக்கிறது. இந்தியாவில் பாதிக்கப்பட்டவர் 2 ஆயிரத்திற்கு அதிகமாகவும், பலியானோர் எண்ணிக்கை 50க்கு அதிகமாக உள்ளது. இந்த நிலையில் உலக வங்கியானது இந்தியா கொரோனா தொற்றை சமாளிக்க அவசர நிதியாக 1 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியினை வழங்க முன்வந்துள்ளது.

1.9 பில்லியன் அமெரிக்க டாலர் உலக வங்கியின் மொத்த முதலுதவி நிதியானது 25 நாடுகளுக்கு உதவும் என்றும், 40 க்கும் மேற்பட்ட நாடுகள் இதனைக் கொண்டு புதிய முயற்சிகளில் முன்னேறி வருகின்றன என்றும் உலக வங்கி குறிப்பிட்டுள்ளது. இந்த அவசர நிதியில் பெரிய அளவு இந்தியாவுக்குக் கிடைத்துள்ளது.

இந்தியா, இந்த நிதி மூலமாக சிறந்த கண்காணிப்பு, பரிசோதனை, புதிய தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை வாங்குதல், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை தொடர்பு தடமறிதல், புதிய தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளை அமைப்பது போன்ற நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொள்ள இயலும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. மேலும், இந்த கொரோனா தொற்று பரவலுக்கு எதிரான நடவடிக்கைகளை பல உலக நாடுகள் இந்த முதலுதவி நிதி மூலமாக மேற்கொண்டிருக்கின்றன என்று உலக வங்கி நிர்வாகக் குழு குறிப்பிட்டுள்ளது.

தெற்காசியாவில் பாகிஸ்தானுக்கு உலக வங்கி 200 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலுதவி நிதியாக வழங்க உள்ளது. இதன் மூலமாக மருத்துவ ஏற்பாடுகளை மேலும் வலுவானதாக மாற்ற இந்த நிதியானது பயன்படும். மட்டுமல்லாது, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய ஏழை மக்களுக்கும் இது பயன்படும். அதையும் கடந்து சமூகப் பாதுகாப்பு மற்றும் கல்விக்கும் இந்நிதி பயன்படும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

தெற்காசியாவில் பாகிஸ்தானை அடுத்து ஆப்கானிஸ்தானுக்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர்களும், மாலத்தீவுக்கு 7.3 மில்லியன் அமெரிக்க டாலர்களும், இலங்கைக்கு 128.6 மில்லியன் அமெரிக்க டாலர்களும் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் ஏற்கெனவே உள்ள மருத்துவக் கட்டமைப்புகளை உலக வங்கியின் இந்த நிதியானது மேலும் சிறப்பாக மாற்ற உதவும். இந்த நிதி அந்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறியவும், பரிசோதனை ஆய்வகங்களை வலுப்படுத்தவும் உதவுவதால், கொரோனா தொற்று பரவலின் வேகத்தினை கட்டுப்படுத்த முடியும் என்று உலக வங்கி குறிப்பிடுகின்றது.

உலக நாடுகள் தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் முயற்சிக்கு ஆதரவளித்து, அடுத்த 15 மாதங்களில் 160 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியினை உலக வங்கி வழங்க இருப்பதாக தெரிவிக்கின்றது. பரந்த பொருளாதார திட்டத்தின் மூலம் தொற்று பாதித்தவர்களை மீட்கும் நடவடிக்கையினை தீவிரமாக்குவது.வளர்ச்சியினை உருவாக்குவது, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதன் மூலம் பொருளாதார நிலைமை சீராக்கலுக்கு உதவுவது, ஏழைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பது போன்றவை இந்த நிதியின் நோக்கமாகக் கருதப்படுகின்றது.

உலக வங்கியின் இத்தகைய நடவடிக்கைகள் 65 க்கும் அதிகமான நாடுகளில் சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்தி வருவதாக உலக வங்கி குழுமத்தின் தலைவர் டேவிட் மால்பாஸ் கூறியுள்ளார். மேலும், “வளரும் நாடுகளின் கட்டமைப்பினை வலுப்படுத்த நாங்கள் முயன்று வருகின்றோம். இது தொற்றிலிருந்து மக்களைப் பெரிதும் மீட்கும். மட்டுமல்லாது தொற்றால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தினை மீட்டெடுக்கவும் உதவும். இந்த தொற்று காரணமாக ஏழ்மையானவர்கள் மற்றும் அவர்கள் சார்ந்திருக்கின்ற நாடுகள் கடுமையான பாதிப்புகளை எதிர் கொள்ள இருப்பதால், தற்போது உலக வங்கியானது இந்த நாடுகள் மீது கவனம் செலுத்தி வருகின்றது” என்று டேவிட் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தொற்று காரணமாக சமீப காலமாகப் விநியோக சங்கிலியானது பரவலாக பாதிக்கப்பட்டிருக்கின்றது. இதனால் அரசாங்கங்கள் மூலமாக விநியோகத்தினை புதுப்பித்து மருத்து மற்றும் அத்தியாவசிய பொருட்களை உலக நாடுகள் அனைத்திற்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியை தற்போது உலக வங்கி முன்னெடுத்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் உதவ உலக வங்கி கோரிக்கை வைத்துள்ளது. 

.