2007-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
Dehradun, Uttarakhand: இந்தியாவின் முதல் பெண் டிஜிபி கஞ்சன் சவுத்ரி பட்டாச்சார்யா மறைந்தார். உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். இவரின் வயது 70 ஆகும்.
1973 -ல் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வானவர். 2004 -ல் உத்தர்காண்ட் மாநிலத்தில் டிஜிபியாக நியமிக்கப்பட்டார். இந்தியாவின் பெண் டிஜிபி என்ற பெருமையை அவர் பெற்றார். 2007-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப் பிறகு ஹரித்வார் தொகுதியில் இருந்து ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக 2014 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் அவரால் வெற்றி பெற முடியவில்லை.
பட்டாச்சார்யாவின் மறைவுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இரங்கல் தெரிவித்துள்ளார்.
“நாட்டின் முதல் பெண் டிஜிபி காஞ்சன் சவுத்ரி பட்டாச்சார்யா காலமானது வருத்தமளிக்கிறது. அவர் ஓய்வு பெற்ற பின்பும் பொது வாழ்க்கையில் சுறுசுறுப்பாக இருந்தார். மேலும் அவர் கடைசி வரை நாட்டுக்கு சேவை செய்ய விரும்பினார்” என்று அர்விந்த் கெஜ்ரிவால் ட்வீட் செய்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநில காவல் துறையும் பட்டாச்சார்யாவின் இறப்புக்கு வருத்தும் தெரிவித்து ட்வீட் செய்துள்ளது.