Read in English
This Article is From Nov 19, 2019

‘மகள்களை மீட்டுத் தருமாறு’ நித்தியானந்தாவின் ஆசிரமம் மீது பெற்றோர் பரபரப்புக் குற்றச்சாட்டு!

நீதிமன்றத்தில் ஷர்மா குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்து, தங்களது மகள்களை ஆஜர்படுத்த உத்தரவிரவிடுமாறு முறையிட்டுள்ளனர்

Advertisement
இந்தியா Edited by

நித்தியானந்தாவின் கல்வி நிறுவனத்தில் உள்ள பிற குழந்தைகள் பற்றியும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

Ahmedabad:

சர்ச்சைக்குரிய சாமியாரான நித்தியானந்தாவின் (Nithyananda) ஆசிரமத்தில் தங்களின் இரண்டு மகள்களும் வலுக்காட்டாயமாக தங்கவைக்கப்பட்டு உள்ளார்கள் என அவர்களின் பெற்றோர் குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். 

இது குறித்து ஜனார்த்தன ஷர்மா மற்றும் அவரது மனைவி நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘கடந்த 2013 ஆம் ஆண்டு பெங்களூருவில் இருக்கும் நித்தியானந்தாவுக்குச் சொந்தமான கல்வி நிறுவனத்தில் 7 முதல் 15 வயதுடைய எங்கள் 4 மகள்களை அனுமதித்தோம்,' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஆண்டு மகள்கள் அனைவரும் அகமதாபாத்தில் இருக்கும் நித்தியானந்தாவிற்குச் சொந்தமான இன்னொரு கல்வி நிறுவனமான டெல்லி பப்ளிக் பள்ளியில் அனுமதிக்கப்பட்டது ஜனார்த்தனாவுக்கும் அவரது மனைவிக்கும் தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து மகள்களைப் பார்க்க இருவரும் சென்றுள்ளனர். ஆனால், கல்வி நிர்வாகம் மகள்களைப் பார்க்க அவர்களை அனுமதிக்கவில்லை என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

இதைத் தொடர்ந்து அரசு அதிகாரிகளின் உதவியோடு தங்களது இரு இளைய மகள்களையும் ஷர்மா குடும்பத்தினர் மீட்டு வந்துள்ளனர். ஆனால், லோபமுத்ரா என்னும் 21 வயது மகளையும், நந்திதா என்னும் 18 வயது மகளையும் அவர்களால் மீட்டு வர முடியவில்லையாம்.

Advertisement

இதைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் கல்வி நிறுவனத்துக்கு எதிராக புகார் கொடுத்துள்ளனர் ஷர்மா குடும்பத்தினர். வலுக்கட்டாயமாக தங்கள் மகள்களைக் கடத்தி சட்டத்துக்கு எதிராக நித்தியானந்தா குழுமத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களை அடைத்து வைத்துள்ளனர் என்று புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதையடுத்துதான், நீதிமன்றத்தில் ஷர்மா குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்து, தங்களது மகள்களை ஆஜர்படுத்த உத்தரவிரவிடுமாறு முறையிட்டுள்ளனர். மேலும், நித்தியானந்தாவின் கல்வி நிறுவனத்தில் உள்ள பிற குழந்தைகள் பற்றியும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 
 

Advertisement
Advertisement