This Article is From Oct 04, 2018

மைக்ரோ ஓவனில் 3அடி நீள பாம்பு! - அதிர்ந்த தம்பதியினர்

மைக்ரோ வேவ் ஓவனை திறந்தபோது அதிலிருந்த பாம்பை கண்டு அதிர்ச்சியடைந்தேன்.

மைக்ரோ ஓவனில் 3அடி நீள பாம்பு! - அதிர்ந்த தம்பதியினர்

கண்டெடுக்கப்பட்ட பாம்பிற்கு மீட்பு குழுவினர் சமி என்று பெயரிட்டனர்.

கடந்த செப்.28 அன்று லண்டனின் ஸ்டாக்போர்ட்டில் வசிக்கும் வயதான தம்பதியினர், சமைப்பதற்காக ஓவனை திறந்த போது அதிலிருந்த பாம்பை கண்டு அதிர்ந்து போயுள்ளனர். பின்னர் இதுகுறித்து, அங்கிருக்கும் உயிரின வதைதடுப்பு பிரிவினருக்கு (RSPCA) தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் அவர்கள் வந்து பாம்பினை பிடித்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து, உயிரின வதை தடுப்பு பிரிவினர் கூறுகையில், 82 வயதான அப்பெண் சமைப்பதற்காக ஓவனை திறந்தபோது அதிலிருந்த 3 அடி நீளமுள்ள ஆப்பரிக்க பழுப்பு நிற பாம்பினை கண்டு கடும் அதிர்ச்சியடைந்துள்ளார். முதலில் தனக்கு சமீபத்தில் தான், கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்பதால், ஓவன் உள்ளே இருப்பது பாம்பு தானா என அவருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

51l164ok

இதைத்தொடர்ந்து, தனது கணவரை அழைத்து வந்த அந்த பெண் ஓவனை திறந்து காண்பித்துள்ளார். அப்போது அவர் ஓவனில் இருப்பது பாம்பு தான் என கூறிய பின்னரே அப்பெண் நம்பியுள்ளார். அதுவரை தனது கண் பார்வைக் கோளாறு என்றே அவர் நினைத்துள்ளார்.

மீட்கப்பட்ட அந்த பாம்பினை வளர்ப்பதற்கு எவரேனும் ஆர்வமாக இருக்கிறார்களா உயிரின வதைதடுப்பு பிரிவினர் (RSPCA) விசாரித்து வருகிறார்கள். மேலும் கண்டெடுக்கப்பட்ட அந்த பாம்பிற்கு மீட்பு குழுவினர் சமி என்று பெயரிட்டுள்ளனர்.

Click for more trending news


.