நண்பர்களின் கட்அவுட்டுக்கள் முன்பு நடந்த திருமணம்
இங்கிலாந்தில் நண்பர்களின் கட்அவுட்டுக்காக 2 லட்சம் ரூபாய் செலவு செய்து திருமணம் முடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
இங்கிலாந்தில் ரோமானி மற்றும் சாம் ரோண்டியோ இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இருவரும் தங்கள் நண்பர்கள், உற்றார் உறவினர் முன்னிலையில் பிரம்மாண்டமாக திருமண நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால், அதற்குள்ளாக கொரோனா பரவல் காரணமாக திருமண தேதி தள்ளி வைக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதும். மீண்டும் திருமண தேதி முடிவு செய்யப்பட்டு நண்பர்கள் அனைவரும் அழைக்கப்பட்டனர். ஆனால், திருமண நிகழ்வில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மக்கள் கலந்து கொள்ளக்கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும், வெளியூர், வெளிநாடுகளில் இருக்கும் நண்பர்களாலும் திருமணத்திற்கு வரமுடியாத சூழல் உள்ளதாக தெரிவித்துவிட்டனர்.
இதற்கு மேல் திருமணத்தை தள்ளி போடவும் முடியாது என்ற நிலையில், ஒரு புதுயுக்தியை கையாண்டனர். அதன்படி, நண்பர்கள் படங்கள் அனைத்தையும் கட்அவுட்டுக்களாக எடுத்து திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
இதற்காக 2,000 பவுண்ட் செலவில் (இந்திய மதிப்பில் சுமார் 1.8 லட்சம் ரூபாய்) நண்பர்களின் படங்களை கட்அவுட்டுக்களாக வடிவமைத்து திருமண மண்டபத்தை நிரப்பினர். இதில் எந்தக்கட்டுப்பாடுகளும் இல்லை, அரசு விதிகளையும் மீறவில்லை.
நண்பர்களின் முழு உருவப்படங்கள், உறவினர்களின் குடும்ப படங்கள் அனைத்தையும் கட்அவுட் எடுத்து அதன் முன்பு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். இந்த சம்பவம் அனைவருக்கும் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கட்அவுட்டுக்கள் முன்னிலையில் நடந்த திருமண படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
.
Click for more
trending news