This Article is From Sep 26, 2019

Video: காண்டாமிருகத்தைக் "காண்டாக்கிய" தம்பதி… கொதித்தெழுந்த நெட்டிசன்ஸ்!

இன்னொருவரோ, “அந்த பாவப்பட்ட காண்டாமிருகத்தின் வாயில் எதாவது கெமிக்கலை ஊற்றிவிட்டார்களா..?” என்று வருத்தத்துடன் கேள்வியெழுப்பியிருக்கிறார்.

Video: காண்டாமிருகத்தைக்

சிலரோ, “மிருகத்தைக் கருணையோடு நடத்துங்கள்” என்று அறிவுரை வழங்கியுள்ளனர். 

உலகம் முழுவதும் தங்களுக்கு என்ன குழந்தை பிறக்க உள்ளது என்பதை தம்பதிகள் அறிந்துகொள்ள பல்வேறு சடங்குகளை செய்து தெரிந்துகொள்வது நடைமுறையில் இருக்கும் ஒன்று. அப்படி ஒரு வித்தியாசமான முறையில் சடங்கு செய்து அதை வீடியோவாக எடுத்து, பகிர்ந்த தம்பதிக்கு நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

ஜோனத்தன் மற்றும் பிரிட்ஜெட் ஜோசப் ஆகியோர், ஜெல்லி நிரப்பிய ஒரு தர்பூசணிப் பழத்தை காண்டாமிருகம் ஒன்றின் வாயில் போடுகின்றனர். காண்டாமிருகம் கடித்த உடன் என்ன வண்ணத்தில் ஜெல்லி வழிகிறதோ, அதற்கு ஏற்றாற் போல குழந்தை பிறக்கும் என்பது தம்பதியின் நம்பிக்கையாக இருந்துள்ளது. காண்டாமிருகம் தர்புசணியை பீஸ் பீஸாக நொறுக்கியவுடன், நீல நிறத்தில் ஜெல்லி வழிகிறது. இதனால், தங்களுக்கு ஆண் குழந்தை பிறக்க உள்ளதாக ஆர்பரிக்கின்றனர் ஜோனத்தன் மற்றும் பிரிட்ஜெட். 

டெக்சாஸில் உள்ள உயிரியல் பூங்காவில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக ஃபாக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்து டிக் டாக்கில் பகிரப்பட்டுள்ளது. 

வீடியோவைப் பார்க்க:

அந்த வீடியோவை ஆனா பிரெடன் என்கிற திரைப்பட இயக்குநர் பகிர்ந்துள்ளார். அவரின் ட்விட்டர் பக்கத்தில் இருந்துதான் வீடியோ வைரலாகியுள்ளது. பலரும் தம்பதியின் இந்த செயலுக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஒருவர், “ஆண் குழந்தை பிறக்க உள்ளதை உணர்த்தும் வகையில் ஜெல்லி வழிந்தவுடன் ‘கடவுளுக்கு நன்றி' என்று அந்த ஆண் கூறுகிறார். பெண் குழந்தை என்றால் கேவலாமா..?” என்று ட்விட்டர் மூலம் கேள்வியெழுப்பியுள்ளார். 
 

இன்னொருவரோ, “அந்த பாவப்பட்ட காண்டாமிருகத்தின் வாயில் எதாவது கெமிக்கலை ஊற்றிவிட்டார்களா..?” என்று வருத்தத்துடன் கேள்வியெழுப்பியிருக்கிறார். சிலரோ, “மிருகத்தைக் கருணையோடு நடத்துங்கள்” என்று அறிவுரை வழங்கியுள்ளனர். 

அதே நேரத்தில் பிரிட்ஜெட், இந்த எதிர்வினைக்கு விளக்கம் அளித்துள்ளார். ‘காண்டாமிருகத்துக்குக் கொடுக்கப்பட்டது எந்தவித கெமிக்கலும் சேர்க்காத ஜெல்லிதான். அதை சாப்பிட்டது மிருகத்துக்கு மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. பெண் குழந்தை பெற்ற நாங்கள் பல நாட்களாக ஆண் குழந்தைக்காக காத்திருக்கிறோம். அதன் வெளிப்பாடே அந்த சந்தோசம்' என்று கூறியுள்ளார். 

Click for more trending news


.