This Article is From Oct 31, 2018

அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; சிபிஐக்கு மாற்ற உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த 11வயது சிறுமியை அவர் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பில் வேலை பார்த்து வந்த பிளம்பர், காவலர், பணியாளார்கள் உட்பட 17 பேர் தொடர்ந்து 7 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர்.

Advertisement
Chennai

தொடர்ந்து 7 மாதங்களாக பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

Chennai:

இது தொடர்பாக, குற்றம்சுமத்தப்பட்ட 14 பேர் தொடர்ந்த மனுவை விசாரித்த நீதிபதி, இந்த பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐக்கு மாற்ற மறுப்பு தெரிவித்துள்ளனர்.

குற்றம்சுமத்தப்பட்டவர்ளால் அச்சிறுமி தொடர்ந்து ஏழு மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வந்துள்ளார். 

இதுதொடர்பான மனுவை விசாரித்த நீதிபதி ஏடி ஜெகதீஷ் சந்திரா கூறுகையில், இந்த வழக்கினை விசாரித்து வரும் இன்ஸ்பெக்டர் மீது எந்த விதமான புகாரும் குறிப்பிடப்படாத நிலையில், சிறுமி தொடர்பான பாலியல் வன்கொடுமை வழக்கினை சிபிஐக்கு மாற்ற முடியாது என்று தெரிவித்தார். 

மனுதாரர், இவ்வழக்கு தொடர்பாக எதுவும் குறிப்பிட்டு கூறாத நிலையில் வழக்கினை வேறு துறைக்கு மாற்ற முடியாது என்றும் தெரிவித்துள்ளார். 

Advertisement

11வயது சிறுமியை அவர் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பில் வேலை பார்த்து வந்த பிளம்பர், காவலர், பணியாளார்கள் 17 பேர் 7 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர். 

அச்சிறுமியை தொடர்ந்து ஏழு மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து 17 பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 

Advertisement
Advertisement