This Article is From Jul 08, 2020

டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட வெளிநாட்டவர்களுக்கு ஜாமீன்! டெல்லி நீதிமன்றம் வழங்கியது

அவர்கள், ஆப்கன், பிரேசில், சீனா,  அமெரிக்கா, உக்ரைன், ஆஸ்திரேலியா, எகிப்து, ரஷ்யா,  அல்ஜீரியா, பெல்ஜியம், சவுதி அரேபியா, ஜோர்டான், பிரான்ஸ், கஜகஸ்தான், மொராக்கோ, பிரிட்டன், பிஜி, சூடான், பிலிப்பைன்ஸ், எத்தியோப்பியா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள்.

டெல்லி மாநாட்டில்  கலந்து  கொண்ட வெளிநாட்டவர்களுக்கு ஜாமீன்! டெல்லி நீதிமன்றம் வழங்கியது

நேற்று இதேபோன்ற வழக்கு தொடர்பாக மலேசியாவை சேர்ந்த 122 பேருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. 

New Delhi:

டெல்லி தப்லீக் மாநாட்டில் கலந்து கொண்ட 21 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு டெல்லி  நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. விசா விதிமுறைகளை மீறியதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

ரூ. 10 ஆயிரம் வைப்புத் தொகையின்பேரில் வெளிநாடுகளை சேர்ந்தவர்களுக்கு ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளளது. 

வழக்கு விசாரணையின்போது ஓட்டல்களில்  தங்க வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டவர்கள், வீடியோ கான்பரன்சிங் மூலமாக நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்கள். 

அவர்கள், ஆப்கன், பிரேசில், சீனா,  அமெரிக்கா, உக்ரைன், ஆஸ்திரேலியா, எகிப்து, ரஷ்யா,  அல்ஜீரியா, பெல்ஜியம், சவுதி அரேபியா, ஜோர்டான், பிரான்ஸ், கஜகஸ்தான், மொராக்கோ, பிரிட்டன், பிஜி, சூடான், பிலிப்பைன்ஸ், எத்தியோப்பியா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள்.

நேற்று இதேபோன்ற வழக்கு தொடர்பாக மலேசியாவை சேர்ந்த 122 பேருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. 

மொத்தம் 956 வெளிநாட்டவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டிருந்தது. அவர்கள் மார்ச்சில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்றனர். தப்லீக்  மாநாட்டில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 

குற்றப்பத்திரிகையின்படி வெளிநாட்டவர் மீது விசா விதி மீறல்,  அரசு விதிகளை மீறியது, 144 தடை உத்தரவை மீறியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. 

(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.