This Article is From Dec 21, 2018

மேற்கு வங்கத்தில் பாஜக ரத யாத்திரைக்கு அனுமதியளித்தது நீதிமன்றம்

ரத யாத்திரைக்குப் பின்னர் தூய்மைப்படுத்தும் யாத்திரை என பொருள்படும் பவித்ரா யாத்திரையை திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் மேற்கொள்ள உள்ளனர்.

Advertisement
இந்தியா
Kolkata:

மேற்கு வங்காளத்தில் ரத யாத்திரை நடத்துவதற்கு பாஜகவுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது. அதே நேரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னதாக வகுப்புவாத பிரச்னைகள் ஏற்படும் என்று கூறி, ரத யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அதற்கு கொல்கத்தா நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தனது ட்விட்டர் பதிவில், ''எதிர்க்கட்சிகள் ஏதாவது ஒரு நிகழ்ச்சியை நடத்த முயற்சி மேற்கொண்டு, அந்த நிகழ்ச்சிக்கு பாஜக தடை விதித்தால், அதனை எமர்ஜென்சி என்று கூறுவார்கள். இப்போது ஏன் கருத்து தெரிவிக்க மறுக்கிறார்கள்'' என எதிர்க்கட்சிகளை கேள்வி எழுப்பியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக ஆட்சியமைக்கவில்லை. இங்கு 42 மக்களவை தொகுதிகள் உள்ளன. இந்த அனைத்து தொகுதிகளுக்கும் பாஜகவின் ரத யாத்திரை செல்லவுள்ளது. இதன்பின்னர் தூய்மைப்படுத்தும் யாத்திரை என பொருள்படும் பவித்ரா யாத்திரையை திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் மேற்கொள்ள உள்ளனர்.
 

Advertisement
Advertisement