Read in English
This Article is From Apr 08, 2019

சசிதரூர் மீதான அவதூறு வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்தது

சசி தரூர் பெங்களூர் இலக்கிய விழாவில் உரையாற்றுகையில் “மோடி சிவலிங்கத்தின் மீது உட்கார்ந்துள்ள தேளைப் போன்றவர் அதைக் கையாலும் அகற்ற முடியாது. செருப்பாலும் அடிக்க முடியாது என்றே கூறியிருந்தார்.

Advertisement
இந்தியா
New Delhi:

பாரதிய ஜனதா கட்சி தலைவர் ராஜீவ் பாப்பர் டெல்லி நீதிமன்றத்தில் தாக்கல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரான சசிதரூருக்கு எதிராக அவதூறு வழக்கு ஒன்றை பதிவு செய்தார். மெட்ரோபாலிட்டன் துணை மாஜிஸ்திரேட் சமர் விஷால் ஏப்ரல் 22 ம் தேதி தரூர்க்கு சம்மன்  அனுப்பப்படுமா/ இல்லையா என்பது  தெரிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்

சசி தரூர், “பிரதமர் மோடி சிவ லிங்கத்தின் மீது அமர்ந்துள்ள அமர்ந்துள்ள தேள்” என்று விமர்சனம் செய்திருந்தார்.  இந்தக் கருத்திற்கு இந்து தெய்வத்தை நிந்திக்கும் வகையில் இருப்பதுடன் அவதூறான கருத்து என்று கூறி இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பிரிவு 499/500 என்ற பிரிவின் கீழ் அவதூறு வழக்கினை பதிவு செய்தார். 

சசி தரூர் பெங்களூர் இலக்கிய விழாவில் உரையாற்றுகையில் “மோடி சிவலிங்கத்தின் மீது உட்கார்ந்துள்ள தேளைப் போன்றவர் அதைக் கையாலும் அகற்ற முடியாது. செருப்பாலும் அடிக்க முடியாது என்று கூறியிருந்தார். 

Advertisement

திரு. பாப்பர் சசிதரூரின் கருத்து அடிப்படையற்றது,  அவதூறானது என்றும் கூறியுள்ளார். மேலும் நீதிமன்றத்தில் பிரதமர் மோடி மிகப்பெரிய சாதனைகளைச் செய்த பிரதமர் என்றும் கூறினார்.

Advertisement