சென்னை: (ஐஏஎன்எஸ்) சென்னை மாநகராட்சியில் உள்ள ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளை இடமாற்றம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஷெனாய் நகரில் உள்ள தனியார் இடத்தை மறித்து, தம் வீட்டின் முன் இடையூறாக வைத்திருக்கும் ஜெனரேட்டரை அகற்றக் கோரி மாநகராட்சி அதிகாரிகளிடம் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை இல்லை என்று லக்ஷ்மி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, லஞ்சம் கொடுக்காமல் எந்த சான்றும் பெற முடியாத நிலையில் மக்கள் தவித்து வருவதாக நீதிபதி தெரிவித்தார். அதனை அடுத்து மீண்டும் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, சென்னை மாநகராட்சியில் ஊழல் தடுப்புப் பிரிவில் பணியாற்றும் அனைத்து அதிகாரிகளையும் இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும், மாற்றப்பட்ட இடத்திற்கு 4 வாரத்திற்குள் புதிய அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்றும் அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், மாநகராட்சி அலுவலகங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும், லஞ்சம் வாங்குவதும் லஞ்சம் கொடுப்பதும் குற்றம் என்ற வாசகங்கள் வளாகத்தில் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)