This Article is From Mar 24, 2020

சென்னையில் புதிதாக மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது!

Covid-19: “சென்னையில் புதிதாக 3 பேருக்கு கோவிட்-19 இருப்பது தெரியவந்துள்ளது"

சென்னையில் புதிதாக மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது!

Covid-19: "மூவரும் முறையே போரூர், புரசைவாக்கம் மற்றும் கீழ்க்கட்டளையில் வசித்து வந்தனர்"

ஹைலைட்ஸ்

  • நேற்று வரை தமிழகத்தில் 12 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது
  • இன்று புதிதாக மூவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது
  • இது குறித்த தகவலை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ளார்

Covid-19: தமிழகத்தில் மொத்தமாக 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை மாநில அரசு உறுதி செய்திருந்த நிலையில், தற்போது சென்னையில் புதிதாக மூவருக்கு கோவிட்-19 எனப்படும் கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்துள்ளார் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர். 

இது குறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், “சென்னையில் புதிதாக 3 பேருக்கு கோவிட்-19 இருப்பது தெரியவந்துள்ளது. மூவரும் வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பியவர்கள். அதில் ஒருவர், 74 வயது ஆண். அமெரிக்காவிலிருந்து சென்னை வந்துள்ளார். தற்போது ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இன்னொருவர், 52 வயதுப் பெண். அமெரிக்காவிலிருந்து திரும்பிய அவர் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். சுவிட்சர்லாந்திலிருந்து சென்னை வந்த 25 வயதுப் பெண் மூன்றாவது நபர். அவர் கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூவரும் முறையே போரூர், புரசைவாக்கம் மற்றும் கீழ்க்கட்டளையில் வசித்து வந்தனர். அனைவரும் தற்போது தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். மூவரின் ஆரோக்கியமும் ஸ்திரமாகவே உள்ளது,” என்று தகவல் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு குறித்து அமைச்சர் விஜய பாஸ்கர் நேற்றுஉ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது-

12,519 பேரை வீட்டில் தனிமைப்படுத்தி வைத்துள்ளோம். அவர்களது வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டி விடுகிறோம். நிறைய பேர், வீட்டில் தனிமைப்படுத்தப்படுவதை அலட்சியமாக எடுத்துக் கொள்கின்றனர். இதையடுத்து அவர்களது வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது. 

கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து வந்தவர்கள் கண்டிப்பாக Home Quaratine எனப்படும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இது வேண்டுகோள் அல்ல. தமிழக அரசின் உத்தரவு. பொதுமக்களின் நலனுக்காக, வைரஸ் சமூக பரவலாக மாறாத அளவுக்கு அவர்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது, என்று வலியுறுத்தினார். 
 

.