Read in English
This Article is From Jun 15, 2020

சீனாவில் பத்து இடங்களில் மீண்டும் ஊடரங்கு!

வடமேற்கு ஹைடியன் மாவட்டத்தின் இரண்டாவது சந்தையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் புதியதாக கண்டறியப்பட்டுள்ளனர். இதன் காரணமாக சந்தை சந்தை மற்றும் அருகிலுள்ள பள்ளிகள் மூடப்படும் என்றும், இவற்றை ஒட்டியுள்ள பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும், பெய்ஜிங்  நகர அதிகாரி லி ஜுன்ஜி ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

Advertisement
உலகம்

சீனாவில் இன்று 49 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 36 பேர் பெய்ஜிங்கை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Beijing:

சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 80 லட்சத்தினை நெருங்கிக் கொண்டிருக்கக்கூடிய நிலையில், முதன்முதலில் தொற்று கண்டறியப்பட்ட சீனாவில் தற்போது இரண்டாவது முறையாக தொற்று பரவத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் சீனாவின் பெய்ஜிங்கில் மற்றும் அதனை ஒட்டியுள்ள 10 இடங்களில் மீண்டும் ஊரடங்கினை இன்று அறிவித்துள்ளது.