This Article is From Apr 07, 2020

#CoronaWarriors - அயராது உழைக்கும் போலீஸ், மருத்துவர்களுக்கு குவியும் பாராட்டுகள்!

#CoronaWarriors: பலரும் இந்தப் படங்களுக்குக் கீழ் நெகிழ்ச்சியான கருத்துகள் பதிவிட்டுத் தங்களது நன்றியைத் தெரிவித்தார்கள். 

#CoronaWarriors - அயராது உழைக்கும் போலீஸ், மருத்துவர்களுக்கு குவியும் பாராட்டுகள்!

Coronavirus Lockdown: ஒரு ட்விட்டர் பயனர், “நாம் எல்லோரும் இதில் ஒன்றாகத்தான் இருக்கிறோம். இந்தப் போராளிகளை கடவுள் ஆசீர்வதிக்கட்டும்,” என்கிறார்.

#CoronaWarriors: கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக களத்தில் தொடர்ந்து போராடி வருவது மருத்துவர்கள், சுகாதாரத் துறை ஊழியர்கள் மற்றும் காவலர்கள்தான். இப்படி தங்களின் நலன் பாராது நாட்டுக்காக அயராது உழைத்து வரும் ஊழியர்களைப் பாராட்டும் வகையில் மத்திய அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி, தனது ட்விட்டர் பக்கத்தில் சில புகைப்படங்களைப் பகிர்ந்து, #CoronaWarriors என்று குறிப்பிட்டார். அந்த உருகவைக்கும் படங்கள் தற்போது இணைய வைரலாக மாறியுள்ளது. 

பதிவிட்ட புகைப்படங்களுடன் ரெட்டி, “இந்த 4 படங்கள் #CoronaWarriors -ன் போராட்டத்தை நமக்கு எடுத்துரைக்கின்றன,” எனக் கருத்திட்டுள்ளார். 

முதல் படத்தில் ஒரு போலீஸ், பொது வெளியில் தரையில் அமர்ந்து அவசரமாக உணவு அருந்துவது தெரிகிறது. இரண்டாவது படத்தில் காவலுக்கு வைக்கப்பட்ட தடுப்புகளுக்குப் பின் ஒரு காவலர் படுத்து உறங்குகிறார். மூன்றாவது படத்தில் தன் வீட்டிற்கு வெளியே அமர்ந்து ஒரு காவலர் சாப்பிடுகிறார். கடைசி படத்தில் தனது பணியிலிருந்து சிறிய ஓய்வு கிடைத்த பின்னர் வீட்டுக்கு வெளியில் அமர்ந்து ஒரு காவலர், தன் குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருக்கிறார். 
 

அமைச்சர் ரெட்டியின் புகைப்படங்களை கர்நாடக பாஜக-வும் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டது. 

பலரும் இந்தப் படங்களுக்குக் கீழ் நெகிழ்ச்சியான கருத்துகள் பதிவிட்டுத் தங்களது நன்றியைத் தெரிவித்தார்கள். 

ஒரு ட்விட்டர் பயனர், “நாம் எல்லோரும் இதில் ஒன்றாகத்தான் இருக்கிறோம். இந்தப் போராளிகளை கடவுள் ஆசீர்வதிக்கட்டும்,” என்கிறார். இன்னொருவர், “எல்லோருக்கும் மிக்க நன்றி,” என்று நெகிழ்கிறார். மற்றொருவர், “உண்மையான போராளிகளுக்கு எனது வணக்கம்,” எனக் கருத்திடுகிறார். 

Click for more trending news


.