This Article is From Apr 03, 2020

‘ஊரடங்கு விதிகளை மீறுவோரை 2 ஆண்டு சிறையில் தள்ளுங்கள்’ – மத்திய அரசு உத்தரவு!!

கொரோனா பரவலை தடுப்பதற்காக மத்திய அரசு நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கை ஏற்படுத்தியுள்ளது. இதனை மீறி, சிலர் வழக்கம்போல வெளியே சுற்றித்திரிவதாக நாடு முழுவதும் புகார்கள் எழுந்துள்ளன.

‘ஊரடங்கு விதிகளை மீறுவோரை 2 ஆண்டு சிறையில் தள்ளுங்கள்’ – மத்திய அரசு உத்தரவு!!

இந்தியா இன்று 9-வது நாள் ஊரடங்கில் உள்ளது.

ஹைலைட்ஸ்

  • ஊரடங்கை மீறி மக்களில் சிலர் வெளியே சுற்றித் திரிகின்றனர்
  • மருத்துவ பணியாளர்கள் மீது ஒரு சில இடங்களில் தாக்குதல் நடந்துள்ளது
  • விதிகளை மீறுவோரை 2 ஆண்டுகள் வரை சிறையிலடைக்க மத்திய அரசு உத்தரவு
New Delhi:

ஊரடங்கு விதிகளை மீறுவோரை 2 ஆண்டுகள் சிறைக்குள் தள்ளுங்கள் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுப்பதற்காக மத்திய அரசு நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கை ஏற்படுத்தியுள்ளது. இதனை மீறி, சிலர் வழக்கம்போல வெளியே சுற்றித்திரிவதாக நாடு முழுவதும் புகார்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் மத்திய அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

வெளியில் சுற்றித் திரிவதோடு, கொரோனாவை எதிர்த்துப் போரிடும் மருத்துவ பணியாளர்கள் மீதும் மக்கள் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இவ்வாறு தாக்குதல் நடத்துவோரை ஓராண்டு சிறையில் அடைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த தாக்குதலின்போது மருத்துவ பணியாளர்கள் உயிரிழந்து விட்டால், குற்றம் செய்தவர்கள் 2 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. இதுதொடர்பாக மத்திய அமைச்சரவை செயலர் ராஜிவ் கவுமா மாநில அரசுகளுக்குச் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு பகுதியில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. அந்த இடத்திற்கு மருத்துவ பணியாளர்கள் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அவர்கள் மீது, அங்கிருந்தவர்கள் தாக்குதலை நடத்தி பணியாளர்களை விரட்டியடித்தனர். இதுதொடர்பான வீடியோக்கள் வைரலாகின.

இதேபோ ஐதராபாத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் நேற்று உயிரிழந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் 2 மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்திய காயப்படுத்தினர். விசாரித்தபோது, தாக்குதல் நடத்தியவர்களுக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது.

இந்த சூழலில் ஊரடங்கு விதிகளை மீறுவோருக்கு 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அளிக்க உத்தரவிட்டு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

கடந்த மாதம் 24-ம் தேதியில் இருந்து இந்தியா 21 நாட்கள் ஊரடங்கை நடைமுறைப்படுத்தியுள்ளது. இன்று 9-வது நாளாக ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இம்மாதம் 14-ம் தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வருகிறது.

நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தையும், பலி எண்ணிக்கை 50-யையும் தாண்டியுள்ளது.

இன்று அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, நாளை காலை 9 மணிக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளார்.

.