This Article is From Jul 28, 2020

சென்னையில் கொரோனா வைரஸ்: 84% ஆக அதிகரித்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கை- மண்டலவாரி விவரம்

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 80,761 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர்.

சென்னையில் கொரோனா வைரஸ்: 84% ஆக அதிகரித்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கை- மண்டலவாரி விவரம்

மணலி மண்டலத்தில் மிகக் குறைவாக 198 பேர் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். 

ஹைலைட்ஸ்

  • சென்னையில் ஒரு மாதத்துக்கு முன்பை விட தொற்றுப் பரவல் குறைந்துள்ளது
  • ஆனால், தொடர்ந்து ஒரு நாளுக்கு 1,000 பேருக்கு மேல் தொற்று ஏற்படுகிறது
  • சென்னையில் இந்த மாத இறுதி வரை கட்டுப்பாடுகள் உள்ளன

தமிழகத்தில் நேற்று 6,993 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சென்னையைச் சேர்ந்தவர்கள் 1,138 பேர். ஒட்டுமொத்த அளவில் 2,20,716 பேருக்கு தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 5,723 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 

இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 1,62,249 பேர் சிகிச்சையின் மூலம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 54,896 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 77 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக 3,571 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள். 

சென்னையில் மண்டலம் வாரியாக உள்ள ஆக்டிவ் கேஸ் விவரம் (28.07.2020) வருமாறு:

திருவொற்றியூர் - 458

மணலி - 198

மாதவரம் - 532

தண்டையார்பேட்டை - 602

ராயபுரம் - 852

திரு.வி.க நகர் - 1,038

அம்பத்தூர் - 1,119

அண்ணா நகர் - 1,529

தேனாம்பேட்டை - 1,069

கோடம்பாக்கம் - 1,970

வளசரவாக்கம் - 963

ஆலந்தூர் - 565

 அடையாறு - 1,260

பெருங்குடி - 468

சோழிங்கநல்லூர் - 409

மற்ற மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - 32

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 80,761 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர். இது 84 சதவீத மீட்பு விகிம் ஆகும். 2,032 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். தற்போது 13,064 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சென்னையில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால் 1,821 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையிலேயே அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,970 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீள சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். அதைத் தொடர்ந்து அண்ணா நகர் மண்டலத்திலும் மற்றும் அம்பத்தூர் மண்டலத்திலும்  முறையே 1,529 மற்றும் 1,119 பேருக்கு கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மணலி மண்டலத்தில் மிகக் குறைவாக 198 பேர் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். 

.