This Article is From Mar 23, 2020

கோவிட்-19: “குட் வொர்க்… நன்றி சார்!”- தமிழக அமைச்சரைப் பாராட்டிய ஜெயம் ரவி!

Covid-19 Outbreak: கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை, இந்திய அளவில் 390-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement
தமிழ்நாடு Written by

Covid-19 Outbreak: தமிழகத்தில் தற்போது வரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக இருக்கிறது

Highlights

  • இந்திய அளவில் 390-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு
  • கொரோனா பாதிப்பு காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளனர்
  • தமிழகத்தில் 9 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

Covid-19 Outbreak: தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கக்கூடிய நிலையில், தற்போது வரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக இருக்கிறது. இந்நிலையில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா குறித்து எடுத்து வரும் நடவடிக்கைகளைப் பாராட்டி கருத்து தெரிவித்துள்ளார் நடிகர் ‘ஜெயம்' ரவி. 

ரவி, தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “நமது சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் ட்விட்டர் பக்கத்தைப் பார்த்தேன். அவர் செய்து வரும் பணிகளுக்காக நான் பாராட்டுகிறேன். கோவிட்-19 தொற்று குறித்து அவர் கொடுத்து வரும் விழிப்புணர்வு நன்றாகவே உள்ளது. குட் வொர்க். நன்றி சார். தொடர்ந்து உங்களின் முழு உழைப்பை நமது மாநிலத்துக்காகக் கொடுக்கவும்,” என்று பாராட்டிக் கருத்திட்டுள்ளார். இதை அமைச்சர் விஜயபாஸ்கர், ரீ-ட்வீட் செய்துள்ளார். 

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை, இந்திய அளவில் 390-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர். 

Advertisement

இந்தியாவில் உள்ள 80 மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு போட்டுள்ளது மத்திய அரசு. டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு உள்ளிட்டவை இதில் அடங்கும். இந்த இடங்களில் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் ரயில் சேவை, உள் மாவட்ட பேருந்து சேவைகள், பொதுப் போக்குவரத்து சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. 

Advertisement