இது மாநிலத்தின் மொத்த COVID-19 வழக்குகளின் எண்ணிக்கையை 18 ஆக உயர்த்தியுள்ளது
ஹைலைட்ஸ்
- சிகிச்சை பெற்று வந்த மதுரையை சேர்ந்த 54 வயது நபர்
- அந்த நபர் நீண்ட நாளாக "கட்டுப்பாடற்ற நீரிழிவு" நோயுடன்
- சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் ட்வீட் செய்துள்ளார்
Madurai: கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த மதுரையைச் சேர்ந்த 54 வயது நபர் இன்று (புதன்கிழமை) அதிகாலை அங்குள்ள மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இந்த தொற்று காரணமாக தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் மரணம் இது என்று மாநில சுகாதார அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் இறந்த அந்த நபர் நீண்ட நாட்களாக "கட்டுப்பாடற்ற நீரிழிவு" நோயுடன் இருந்துவந்தார் என்றும் அவர் கூறியுள்ளார்.
"எங்களுடைய சிறந்த முயற்சிகள் இருந்தபோதிலும் மதுரை, ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த கோவிட் -19 பாசிட்டிவ் நோயாளி காலமானார். அவருக்கு ஏற்கெனவே நுரையீரல் சம்பந்தமான பிரச்னை, உயர் இரத்த அழுத்தத்துடன் கூடிய கட்டுப்பாடற்ற நீரிழிவு நோயின் மருத்துவ வரலாறு இருந்தது" என்று சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் ட்வீட் செய்துள்ளார்.
கடந்த செவ்வாய் கிழமை வந்த தகவலின்படி மூன்று பெண்கள் உட்பட மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, இது மாநிலத்தின் மொத்த COVID-19 வழக்குகளின் எண்ணிக்கையை 18 ஆக உயர்த்தியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை இப்போது 11 ஆக அதிகரித்துள்ளது.