This Article is From Apr 02, 2020

இங்கிலாந்தில் ஒரே நாளில் கொரோனாவால் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

Coronavirus: இங்கிலாந்துப் பிரதமரான போரிஸ் ஜான்சனுக்கே சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது

இங்கிலாந்தில் ஒரே நாளில் கொரோனாவால் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

மொத்தமாக இங்கிலாந்தில் இதுவரை, 29,474 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹைலைட்ஸ்

  • இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருகிறது
  • இங்கிலாந்து இளவரசர் சார்லஸுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது
  • தற்போது அவர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ளார்
London:

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, நேற்று ஒரே நாளில் மட்டும் 563 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் கொடுத்துள்ளது அந்நாட்டு அரசு. இங்கிலாந்தில் கொரோனா தொற்று ஏற்பட்டதிலிருந்து தற்போதுதான் முதன்முறையாக ஒரேநாளில் 500-க்கும் மேற்பட்டோர் உயிழிந்துள்ளனர். தற்போது வரை கொரோனா தொற்றால் இங்கிலாந்தில், 2,352 பேர் மரணமடைந்துள்ளனர். 

மொத்தமாக இங்கிலாந்தில் இதுவரை, 29,474 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. செவ்வாய்க் கிழமையைவிட, ஒரே நாளில் கூடுதலாக 4,324 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

கடந்த வாரம் நாடு முழுவதும் ஊரடங்கு உட்பட பல கட்டுப்பாடுகளை விதித்தது இங்கிலாந்து அரசு. ஆனால் அந்நட்டுப் பிரதமரான போரிஸ் ஜான்சனுக்கே சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர், “நிலைமை சரியாவதற்கு முன்னர் மிக மோசமாக மாறும்,” என்று நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இங்கிலாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் சார்லஸுக்கும் கொரோனா இருப்பது சில நாட்களுக்கு முன்னர் உறுதி செய்யப்பட்டு, செவ்வாய்க் கிழமைதான் அவர் தனிமைப்படுத்தலில் இருந்து வெளியே வந்தார். 

கொரோனாவிலிருந்து தேறி வந்த பின்னர் சார்லஸ், “நாட்டின் தேசிய சுகாதார சேவை மிகச் சிறப்பாக செயல்படுகிறது. இந்தப் பிரச்சினை எப்போது முடியுமென்று யாருக்கும் தெரியாது. ஆனால், கண்டிப்பாக முடிவுக்கு வரும்,” என்றார். 

.