This Article is From Jun 02, 2020

4 மாவட்டங்களை தவிர்த்து மற்ற பகுதிகளில் கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளது : முதல்வர்

2.71 லட்சம் பி.சி.ஆர்.  கிட்டுகள் 43 அரசு ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து வகையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதால் மக்கள் இதுகுறித்து  அச்சம் கொள்ளத் தேவையில்லை. 

4 மாவட்டங்களை தவிர்த்து மற்ற பகுதிகளில் கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளது : முதல்வர்

சோதனை அதிகப்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் நாள் ஒன்றுக்கு 4 ஆயிரம்பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் சென்னை உள்பட 4 மாவட்டங்களை தவிர்த்து மற்ற அனைத்துப் பகுதிகளிலும் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு  அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது- 

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில்தான்  கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது.  இதைத் தவிர்த்து தமிழகத்தின் மற்ற அனைத்து பகுதிகளிலும் கொரோனா  பாதிப்பு கட்டுப்பாட்டில் இருக்கிறது.

சென்னையில் குடிசைப் பகுதிகள் மற்றும் மக்கள் அடர்த்தியாக வாழும் இடங்களில்  கொரோனா அதிகம் பரவியுள்ளது.  உயிரிழப்பு விகிதம் 0.8 என்ற அளவில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் குறைவாக இருக்கிறது. 

நோயில் இருந்து குணம் பெறுபவர்களின் சதவீதம் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகம். 55 சதவீதம்பேர் அதாவது  13 ஆயிரத்திற்கும் அதிகமானோர் குணம் அடைந்துள்ளனர். நாட்டிலேயே அதிக எண்ணிக்கையில் 3,700 வென்டிலேட்டர்கள் தமிழகத்தில்தான் உள்ளன. 

கொரோனா பரவல் தடுப்பை தமிழக அரசு மிகச்சிறப்பான முறையில் செய்து வருகிறது.  இருப்பினும், இதுபற்றிய தவறான தகவல்களை  திமுக தலைவர் ஸ்டாலின் மக்களிடம் பரப்பி வருகிறார். 

சோதனை அதிகப்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் நாள் ஒன்றுக்கு 4 ஆயிரம்பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் 13 ஆயிரம் பேருக்கு நாள் ஒன்றுக்கு சோதனை நடத்துகிறோம். 

2.71 லட்சம் பி.சி.ஆர்.  கிட்டுகள் 43 அரசு ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த அனைத்து வகையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதால் மக்கள் இதுகுறித்து  அச்சம் கொள்ளத் தேவையில்லை. 

நம்மிடம் ஒரு லட்சம் டெஸ்ட் கிட்டுகள்தான் இருக்கிறது என்று சொல்லப்படும் தகவல் உண்மை அல்ல.  படுக்கைகள் மட்டும் 75 ஆயிரம் எண்ணிக்கையில் தயார் நிலையில் உள்ளன. 

இவ்வாறு தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். 
 

.