கொரோனா பாதித்த நபர் தனிமைப்படுப்பட்ட வார்டில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார் என போலீசார் தகவல். (Representational image)
ஹைலைட்ஸ்
- கொரோனா பாதித்த நபர் மருத்துவமனை கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை!
- அந்த நபருக்கு சிறுநீரக பிரச்சினைகளும் இருந்ததாக மருத்துவமனை தகவல்
- சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடந்தி வருகின்றனர்.
Bengaluru: பெங்களூரில் கொரோனா வைரஸ் பாதித்த நபர் ஒருவர் மருத்துவமனையில் 5வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, விக்டோரியா மருத்துவமனையில், கொரோனா பாதித்த அந்த நபர் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார் என்று தெரிவித்தார்.
கடும் சுவாச பிரச்சனை காரணமாக அனுமதிக்கப்பட்ட அந்த நபருக்கு சிறுநீரக பிரச்சினைகளும் இருந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து, இன்று காலை மருத்துவமனை வளாகத்தின் 5வது மாடியில் இருந்து அந்த நபர் தற்கொலை செய்து கொண்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.