This Article is From Apr 06, 2020

கொரோனா தொற்றினை எதிர்கொள்ள இந்தியாவுக்கு 2.9 மில்லியன் டாலர் நிதி அளிக்கின்றது அமெரிக்கா

கடந்த இருபது ஆண்டுகளில் அமெரிக்கா இந்தியாவுக்கு 3 பில்லியன் டாலர் நிதியினை இந்தியாவிற்கு வழங்கியுள்ளது. இதில் சுகாதாரத்திற்கு மட்டும் 1.4 பில்லியன் டாலர் நிதி வழங்கப்பட்டிருக்கின்றது.

கொரோனா தொற்றினை எதிர்கொள்ள இந்தியாவுக்கு 2.9 மில்லியன் டாலர் நிதி அளிக்கின்றது அமெரிக்கா

இந்த நிதியானது கொரோன வைரஸை எதிர்த்துப் போராடுவதற்குப் பெரிய அளவில் உதவியாக இருக்கும்

New Delhi:

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடியவர்களின் எண்ணிக்கை 4,000 ஐ கடந்திருக்கின்றது. 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராட இந்தியாவுக்கு 2.9 மில்லியன் டாலர் நிதி வழங்குவதாக அமெரிக்க அரசு தனது உதவி நிறுவனமான யுஎஸ்ஐஐடி மூலம் அறிவித்துள்ளது. இந்த நிதியானது இந்தியா கொரோன வைரஸை எதிர்த்துப் போராடுவதற்குப் பெரிய அளவில் உதவியாக இருக்கும் என்று அமெரிக்கா நாட்டின் இந்திய தூதர் கென்னத் ஜஸ்டர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இந்தியா, அமெரிக்காவுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகளை அனுப்பித் தருமாறு கேட்டுக்கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் யு.எஸ்.ஏ.ஐ.டி நிறுவனம், உலகின் முன்னணி உதவி நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிலையில், இந்த நிறுவனம் மூலமாக இந்தியாவில் நோய் தொற்று பரவுவதைத் தடுப்பதில் அமெரிக்க முயன்று வருகின்றது. கோவிட்-19 வைரஸ் தொற்று உலக நாடுகளின் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலை விடுத்துள்ளது. உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்தால் இந்த சிக்கலை எதிர் கொள்ள முடியும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

கடந்த இருபது ஆண்டுகளில் அமெரிக்கா இந்தியாவுக்கு 3 பில்லியன் டாலர் நிதியினை இந்தியாவிற்கு வழங்கியுள்ளது. இதில் சுகாதாரத்திற்கு மட்டும் 1.4 பில்லியன் டாலர் நிதி வழங்கப்பட்டிருக்கின்றது.

அமெரிக்காவின் யு.எஸ்.ஏ.ஐ.டி நிறுவனம் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்த சர்வதேச இலாப நோக்கற்ற சுகாதார அமைப்பான ஜ்பிகோவால் செயல்படுத்தப்பட்டதாகும். இந்த நிறுவனத்தின் சுகாதா மேம்பாடு குறித்த செயல்பாடுகளுக்கு இந்த நிதியானது பயன்படும். மேலும், இது இந்தியாவில் உலக சுகாதார நிறுவனம் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கும் ஆதரவளிக்கும்.

இந்த நிதியானது, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைக் குணப்படுத்தவும், இதைக் கட்டுப்படுத்த தேவையான உபகரணங்களை கிராமப்புற மற்றும் உள்ளூர் சமூகங்களுக்கு உதவும் என அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய நாடுகளின் பட்டியலில் அமெரிக்க முதல் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

.