This Article is From Apr 02, 2020

கொரோனா தொற்று: அமெரிக்காவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 884 பேர் உயிரிழப்பு!

கொரோனா தொற்று காரணமாக அமெரிக்காவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5000க்கும் மேல் அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று: அமெரிக்காவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 884 பேர் உயிரிழப்பு!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 25,200 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், மொத்தமாக பாதிப்பு எண்ணிக்கை 215,417 ஆக அதிகரித்துள்ளது.

ஹைலைட்ஸ்

  • அமெரிக்காவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 884 பேர் உயிரிழப்பு
  • கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 25,200 பேருக்கு கொரோனா
  • மொத்தமாக பாதிப்பு எண்ணிக்கை 215,417 ஆக அதிகரித்துள்ளது.
Washington:

அமெரிக்காவில் கொரோனா தொற்று பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அதிகபட்சமாக 884 பேர் உயிரிழந்துள்ளதாக ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது. 

இதைத்தொடர்ந்து, அமெரிக்காவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,116ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 25,200 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், மொத்தமாக பாதிப்பு எண்ணிக்கை 215,417 ஆக அதிகரித்துள்ளது. 

அதிகபட்சமாக இத்தாலியில் கடந்த மார்ச்.27ம் தேதியன்று, 969 பேர் ஒரேநாளில் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்தனர். 

அமெரிக்காவின் உயிரிழப்பு எண்ணிக்கை இத்தாலி, ஸ்பெயின் நாடுகளை விட குறைவாக இருந்தாலும், முதன்முதலாக கொரோனா தொற்று உருவெடுத்த சீன நாட்டில் ஏற்பட்ட 3,316 உயிரிழப்பு எண்ணிக்கையை விட அதிகமான உயிரிழப்பை சந்தித்துள்ளது. 

முன்னதாக, நேற்றைய தினம் வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், நாட்டு மக்களுக்குப் பல எச்சரிக்கைகளை விடுத்தார். அதில், அடுத்து வரவுள்ள 2 வாரங்கள் அமெரிக்காவுக்கு மிக மிக துயர்மிகு காலமாக இருக்கும். கொரோனா வைரஸ், அமெரிக்காவைப் பிடித்து உலுக்கும் பிளேக் நோய் போல. அடுத்து வரவுள்ள கடுமையான நாட்களுக்கு அமெரிக்க குடிமக்கள் தயாராக வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்,” என்று கூறியிருந்தார்.

இதேபோல், கடந்த ஞாயிற்றுக்கிழமை, அமெரிக்காவின் மூத்த விஞ்ஞானியான அந்தோனி ஃபாசி, கொரோனா வைரஸ் தொற்று நாட்டில் 100,000 முதல் 200,000 உயிர்களைக் கொல்லக்கூடும் என்ற எச்சரிக்கை கணிப்பை வெளியிட்டிருந்தார். 

.