Read in English
This Article is From Jul 29, 2019

மும்பை ஐஐடி வகுப்பறையில் நுழைந்த பசுமாடு….! வைரல் வீடியோ

சம்பவம் நடந்த போது பலத்தமழை பெய்ததாக மாணவர்கள் கூறுகின்றனர். மேலும் மாடு தங்கும் கட்டிடத்திற்குள் நுழைவதற்கு பதில் வகுப்பறைக்குள் நுழைந்திருக்கலாம் என்று ஐஏஎன்எஸ் தெரிவித்துள்ளது.

Advertisement
விசித்திரம் Edited by

ட்விட்டரில் பகிரப்பட்ட வீடியோவை பாருங்கள்

மும்பை இந்திய தொழில்நுட்பக் கழக வகுப்பறையில் திடீரென பசுமாடு ஒன்று பாட நேரத்தில் வகுப்பறைக்குள் வந்து விட்டது. மாணவர்கள் அதை விரட்டினாலும் பசுமாடு சாவசமாக வகுப்பறையை சுற்றி வருகிறது. இதை மாணவர்கள் வீடியோ எடுத்து ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர்.  

இந்த சம்பவம் சனிக்கிழமை நடந்ததாக கூறப்படுகிறது. மும்பை ஐஐடியின் அதிகாரிகள் இந்த சம்பவம் எங்கு நடந்தது என்பது தெளிவாக தெரியவில்லை என்று கூறிவிட்டனர். மேலும் இது குறித்து விசாரணை செய்வதாகவும் ஐஏஎன்எஸ் நிறுவனத்திடம் தெரிவித்தனர்.  

சம்பவம் நடந்த போது பலத்தமழை பெய்ததாக மாணவர்கள் கூறுகின்றனர். மேலும் மாடு தங்கும் கட்டிடத்திற்குள் நுழைவதற்கு பதில் வகுப்பறைக்குள் நுழைந்திருக்கலாம் என்று ஐஏஎன்எஸ் தெரிவித்துள்ளது.  

Advertisement

ட்விட்டரில் பகிரப்பட்ட வீடியோவை பாருங்கள்

ட்விட்டரில் பலரும் ஜேஇஇ தேர்வு எழுதாமல் வந்துவிட்ட பசு என்று கேம்பஷனுடன் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். 

Advertisement
Advertisement