கூட்டு வன்முறைக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்
New Delhi: ’பசுக் காவலர்களால்’ தொடுக்கப்பட்ட தாக்குதல்களுக்கு எதிராகவும், கூட்டு வன்முறைக்கு எதிராகவும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மத்திய மற்றும் மாநில அரசுகளை உச்ச நீதிமன்றம் கேள்வி கேட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து துஷார் காந்தி என்பவர் தொடுத்த மனுவில், ‘உச்ச நீதிமன்றம் கூட்டு வன்முறை நடத்துவதற்கு எதிராக, மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தது.
குறிப்பாக கூட்டு வன்முறையில் ஈடுபட்டால் அதற்குக் கடுமையான சட்டங்களால் தண்டனை கொடுக்கப்படும் என்பது குறித்து அனைத்து வித ஊடகங்களில் வாயிலாகவும் மத்திய மற்றும் மாநில அரசுகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
ஆனால், இது நாள் வரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கபட்டவில்லை. மேலும் கூட்டு வன்முறையால் பாதிக்கப்பட்ட 54 பேருக்கும் அரசு சார்பில் எந்த நிவாரணமும் அளிக்கப்படவில்லை’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து நீதிமன்றம், ’கூட்டு வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அது குறித்து மத்திய மற்றும் மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும்.
மேலும், கூட்டு வன்முறை குறித்து அனைத்து வித ஊடகங்கள் மூலமும் ஒரே வாரத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அது குறித்தும் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒரே வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளது.