ஹைலைட்ஸ்
- பசுவதை தொடர்பாக உ.பி-யில் சமீபத்தில் சில சம்பவங்கள் நடந்தன
- இந்நிலையில், உச்ச நீதிமன்றம் கண்டனங்களை பதிவு செய்துள்ளது
- மாநில அரசுகள் சட்ட ஒழுங்கை காக்க வேண்டும், நீதிமன்றம்
New Delhi: பசுவதை செய்ததாகக் குற்றம் சாட்டி பலர் மீது தாக்குதல் நடத்தி வருகிறது அடிப்படைவாத அமைப்புகள். இது குறித்த வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
வழக்கு விசாரணையின் போது, ‘பசுவதைக்காக நடத்தப்படும் தாக்குதல்களை ஏற்றுக்கொள்ளவே முடியாது. யாரும் சட்டத்தை அவர்கள் கையில் எடுத்துக் கொள்ள முடியாது. சட்ட ஒழுங்கு சரியாக இருக்கிறதா என்பதை மாநில அரசுகள் தான் உறுதி செய்ய வேண்டும். பசுவதைக்காக தாக்கப்படும் யாராயினும் அவருக்கும் நீதி வழங்கப்பட்டும். ஜாதி மற்றும் மதத்தின் பெயரால் பாதிக்கப்பட்டவரை பிரிப்பதையும் எற்றுக் கொள்ள முடியாது. அதேபோல, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடை தகுந்த காலத்துக்குள் கொடுக்க வேண்டும்’ என்று கூறியது.
இதைப் போன்ற ஒரு வழக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம், ‘நாட்டில் இருக்கும் 29 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் டெரிட்டரிகளில் ஆட்சியில் உள்ள அரசுகள் பசுவதைக்கு எதிராக தாக்குதல் நடத்தப்படும் அடிப்படை வாதக் குழுக்குள் மீது தனி கவனம் செலுத்த வேண்டும்’ என்று உத்தரவிட்டிருந்தது.