This Article is From Mar 05, 2019

திமுக கூட்டணியில் சிபிஎம்… தொகுதி ஒதுக்கீடு உறுதியானது!

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடம் பெறுவது உறுதியாகியுள்ளது.

திமுக கூட்டணியில் சிபிஎம்… தொகுதி ஒதுக்கீடு உறுதியானது!

இரு கட்சிக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவே, கூட்டணி உடன்படிக்கை கையெழுத்தானது.

ஹைலைட்ஸ்

  • திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளது
  • காங்கிரஸுக்கு 10 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது திமுக
  • விசிக-வுக்கு, திமுக இரு தொகுதிகளை ஒதுக்கியுள்ளது

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடம் பெறுவது உறுதியாகியுள்ளது. இன்று சிபிஎம் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூட்டணி உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர். 

திமுக கூட்டணியில் முதன்முதலாக அதிகாரபூர்வமாக இணைந்தது காங்கிரஸ் கட்சிதான். அந்தக் கட்சிக்கு திமுக, 10 நாடாளுமன்றத் தொகுதிகளை ஒதுக்கியது. அதற்கு அடுத்தபடியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, சிபிஐ ஆகியவற்றுக்கு தலா 2 தொகுதிகளும் இந்திய ஜனநாயகக் கட்சி, கொங்கு மக்கள் தேசியக் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தலா  1 தொகுதியும் ஒதுக்கப்பட்டன. இதையடுத்து சிபிஎம் கட்சியுடன் நேற்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் திமுக ஈடுபட்டது. 

இன்று மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு திமுக, சிபிஎம்-க்கு மீண்டும் அழைப்பு விடுத்தது. இதையடுத்து, சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் மூத்த கட்சி நிர்வாகிகளுக் அண்ணா அறிவாலயம் வந்தார். மு.க.ஸ்டாலினும் அறிவாலயம் வந்தார். இரு கட்சிக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவே, கூட்டணி உடன்படிக்கை கையெழுத்தானது. அதன்படி வரும் மக்களவைத் தேர்தலில் இரண்டு இடங்களில் சிபிஎம் போட்டியிடும் என்று தெரிவிக்கப்பட்டது. 

அதே நேரத்தில் அடுத்து நடக்கவுள்ள 21 சட்டமன்ற இடைத் தேர்தலில், திமுக-வுக்கு சிபிஎம் முழு ஆதரவு கொடுக்கும் என்றும் உடன்படிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது மதிமுக-வுடன், திமுக மூத்த நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.


 

.