This Article is From Feb 25, 2020

'ஷாகின் பாக் ஒத்துழையாமை இயக்கத்தைப் போல் செயல்படுகிறது' - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்!

ஷாகின் பாக் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த வலியுறுத்தி நந்த் கிஷோர் கார்க் மற்றும் அமித் சாஹினி ஆகியோர் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். 

'ஷாகின் பாக் ஒத்துழையாமை இயக்கத்தைப் போல் செயல்படுகிறது' - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்!

அடுத்த கட்ட விசாரணை உச்ச நீதிமன்றத்தில் வரும் 24-ம்தேதி நடக்கிறது

New Delhi:

டெல்லியில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக ஷாகின் பாக்கில் நடந்துவரும் போராட்டம் 1920-ல் வெள்ளையருக்கு எதிராக செயல்பட்ட ஒத்துழையாமை இயக்கத்தை போல் உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகழாரம் சூட்டியுள்ளது. 

இது குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் ஹன்னன் மொல்லா அளித்துள்ள பேட்டியில், 'போராட்டத்தின் அடையாளமாக ஷாகின் பாக் மாறி விட்டது. நாம் சுதந்திரத்தின்போது ஒத்துயாமை இயக்கத்தை பார்த்தோம். இன்றைக்கு பல ஆண்டுகளுக்கு பின்னர் ஷாகின் பாக் புதிய போராட்டத்தை முன்னெடடுத்து செல்கிறது. இங்கு எந்தவொரு சட்டமும் மீறப்படவில்லை.

லண்டன், பாரீஸ், நியூயார்க்கில் கூட மக்கள் இவ்வாறுதான் அமர்ந்துகொண்டு போராட்டம் நடத்துகின்றனர். அமைதியான முறையில் அதே நேரத்தில் உறுதியான வழியில் நம் உரிமைக்காக போராடுகிறோம்.' என்றார்.

ஷாகின் பாக் போராட்டத்தில் தூதர்களாக மூத்த வழக்கறிஞர்கள் சஞ்சய் ஹெக்டே மற்றும் சத்னா ராமசந்திரன் மற்றும் முன்னாள் தகவல் ஆணையர் வஜாகத் ஹபிபுல்லா ஆகியோரை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது. அவர்கள் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை வேறு இடத்தில் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். 

ஷாகின் பாக் போராட்டம் தொடர்பாக வரும் 24-ம்தேதி உச்ச நீதிமன்றம் மீண்டு விசாரணை நடத்தவுள்ளது. 

ஷாகின் பாக் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த வலியுறுத்தி நந்த் கிஷோர் கார்க் மற்றும் அமித் சாஹினி ஆகியோர் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். 

ஷாகின் பாக் போராட்டத்தால் டெல்லி - நொய்டா மக்கள் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு ஆளாகி வருவதாக அவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். 

.