அந்த திருடன் திருடும் வீடியோ வைரல் ஆகியுள்ளது
முகத்தில் முகமூடியுடனும், தன் விரல் தடங்கள் சிக்கிவிடக்கூடாது என்பதால் கை,கால்களில் சாக்ஸ் அணிந்து 8 நிமிடங்கள் மிக கவனமாக நடந்து காசு இருக்கும் பெட்டியை திருடினான் அந்த திருடன். ஆனால், அந்த பெட்டியோ காலி பெட்டி. பணம் ஏதும் இல்லை.
அமெரிக்கவின் ப்ளோரிடாவில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள டாமினோஸ் உணவகத்தில் காலை 2 மணி அளவிற்கு திருட நுழைந்த திருடனுக்கு கடைசியில் கிடைத்ததோ காலி பெட்டி தான்.
காலி பெட்டியை திருடிய திருடனை பிடிக்க அந்த மாகாண போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அந்த திருடன் திருடும் வீடியோ:
மிக கவனமாக, 8 நிமிடங்கள் போராடி கடைசியில் காலி பெட்டியை திருடிய திருடனின் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. இது அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தியுள்ளது.
Click for more
trending news