This Article is From Dec 28, 2018

அஜித்தின் விஸ்வாசம் படத்தைப் பற்றி அஷ்வின் செய்த ட்விட்!

ஆஸ்திரேலிய தொடரில் இருக்கும் அஷ்வினின் இந்த ட்விட்டின் இறுதியில் விஸ்வாசம் படத்துக்காக காத்திருக்கிறேன் என்ற ஹேஷ்டேக்கும் இடம் பெற்றிருந்தது

அஜித்தின் விஸ்வாசம் படத்தைப் பற்றி அஷ்வின் செய்த ட்விட்!

இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின், அஜித் நடித்து வெளியாகவுள்ள விஸ்வாசம் படத்தைப் பற்றி சுவாரஸ்யமான விஷயத்தை ட்விட் செய்துள்ளார். இந்த ட்விட் அனைவரையும் நெகிழ செய்தது மட்டுமின்றி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. தனது ட்விட்டர் பக்கத்தில் அஷ்வின் செய்த பதிவு அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.

அந்த ட்விட்டில் கண்ணான கண்ணே என்ற விஸ்வாசம் பட பாடலின் வரிகள் உண்மையிலேயே மெய்சிலிர்க்க வைக்கின்றன. இந்தப் பாடலை கேட்க இனிமையாக இருக்கிறது. இதற்காக இசையமைப்பாளர் இமானை பாராட்டுகிறேன். சித் ஸ்ரீராமின் குரல், தாமரையின் வரிகள் எல்லாமே மேஜிக்கலாக உள்ளது. தந்தை மகள் உறவு கடவுள் தந்த வரம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 

இந்த ட்விட்டோடு தனது மகளோடு உள்ள வீடியோவின் பின்னணியில் அந்த பாடலை இணைத்துப் பகிர்ந்துள்ளார். ஆஸ்திரேலிய தொடரில் இருக்கும் அஷ்வினின் இந்த ட்விட்டின் இறுதியில் விஸ்வாசம் படத்துக்காக காத்திருக்கிறேன் என்ற ஹேஷ்டேக்கும் இடம் பெற்றிருந்தது.

இதேபோல இந்திய முன்னாள் கேப்டன் தோனியும் தனது மகளோடு இருக்கும் வீடியோவை பதிவிடுவார். அதுவும் இணையதளங்களில் வைரலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

.