Read in English
This Article is From May 12, 2019

காலையிலேயே வரிசையில் நின்று ஓட்டு போட்ட கேப்டன் விராட் கோலி!

குர்கானில் உள்ள குர்கான், ரெவாரி மற்றும் நுஹ் மாவட்டங்களில் இன்று காலை 7 மணி முதல் 1,194 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. 

Advertisement
இந்தியா Edited by
Gurgaon:

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, குர்கான் பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் இன்று காலையிலேயே வரிசையில் நின்று வாக்களித்தார். 

வாக்களித்த பின்னர் அவர் யாரிடமும் எதுவும் பேசவில்லை. ஆனால் கூடியிருந்த ரசிகர்களின் வற்புறுத்தலைத் தொடர்ந்து, சிலருக்கு கையெழுத்துப் போட்டு கொடுத்தார். 

ஓட்டு போட்ட பின்னர் நடையை கட்டிய கோலியிடம், ஒரு தன்னார்வலர், ‘ஓட்டு போட வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கு உதவும் வகையில் போஸ் கொடுக்க முடியுமா?' என்றார். அதற்கு சம்மதம் தெரிவித்து, போட்டோவுக்கு போஸ் கொடுத்தார் கோலி. மை தடவப்பட்ட விரலுடன் ரசிகர்களுக்கும் போஸ் கொடுத்தார் கோலி. 
 

குர்கான் நாடாளுமன்றத் தொகுதியில் சுமார் 24 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 22 லட்சம் வாக்காளர்கள் குர்கான் தொகுதியில் வெற்றியாளரைத் தேர்ந்தெடுப்பர். 

Advertisement

குர்கானில் உள்ள குர்கான், ரெவாரி மற்றும் நுஹ் மாவட்டங்களில் இன்று காலை 7 மணி முதல் 1,194 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. 

பாஜக-வின் ராவ் இந்திரஜித் சிங்கிற்கும் காங்கிரஸின் கேப்டன் அஜெய் சிங் யாதவுக்கும் இடையில்தான் குர்கான் தொகுதியில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement
Advertisement