Read in English
This Article is From Nov 15, 2019

ஆர்எஸ்எஸ் கொடியை அகற்றிய மூத்த பல்கலைக்கழக பெண் அதிகாரி மீது வழக்குப்பதிவு!!

மத உணர்வுகளை அவமதித்ததாக கிரண் தாம்லே மீது உத்தர பிரதேச போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisement
இந்தியா Edited by (with inputs from PTI)
Mirzapur:

ஆர்எஸ்எஸ் கொடியை அகற்றிய காரணத்திற்காக பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் மூத்த அதிகாரியை கட்டாய ராஜினாமா செய்ய வைத்ததோடு, அவர் மீது உத்தர பிரதேச போலீசார் மத உணர்வுகளை அவமதித்ததாக வழக்கும் பதிவு செய்துள்ளனர். 

மிர்சாபூரில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகமான பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் துணை தலைமைத் தலைவராக இருந்து வருபவர் கிரண் தாம்லே. இவர்,  மாணவர்கள் மத்தியில் மைதானத்தில் இருந்த ஆர்எஸ்எஸ் கொடியை அகற்றியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, தாம்லேவை பதவி நீக்கம் செய்யக்கோரி மாணவர்கள் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இத்துடன் தாம்லேக்கு அளிக்கப்பட்ட தொந்தரவுகள் முடிந்துவிடவில்லை. உள்ளூர் ஆர்எஸ்எஸ் பிரமுகர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் தாம்லே மீது வழக்கு பதிவும் செய்துள்ளனர். 

இதில் கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண் அதிகாரி கூறும்போது, தங்கள் பல்கலைக்கழக விதிமுறையையே தான் பின்பற்றியதாக தெரிவித்துள்ளார். முதலில் சாக்சா மாணவர்களையே அந்த கொடியை அப்புறப்படுத்தக் கோரி உத்தரவிட்டுள்ளார். 

Advertisement

ஆனால், கொடியை அப்புறப்படுத்த யாரும் முன்வராததால், தானே கொடியை அகற்றியுள்ளார். இதுபோன்ற பதற்றமான சூழலில் இப்படி கொடிகளை பறக்க விடக்கூடாது என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தியும் உள்ளார்.

எனினும், மாணவர்கள் வற்புறுத்தி கொடியை வைக்க அனுமதி கேட்டுள்ளனர். ஆனால், வளாத்திற்குள் கொடியை வைக்க நிச்சியமாக அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தேன் என்றார்.

இதுதொடர்பாக அந்த பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கர் என்பவர் கூறும்போது, சாக்சாவில் காலை 6 மணி அளவில் நாங்கள் யோகா உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொண்டிருந்தோம், அப்போது அங்கு வந்த தாம்லே ஆர்எஸ்எஸ் கொடியை அவமதித்தார்.

மேலும், எந்த சமூகத்தையும் நாங்கள் ஆதரிக்காததால் இங்கு சாக்சா அனுமதிக்கப்படமாட்டாது என்று அவர் கூறினார். மேலும், போராட்டத்தில் இருந்தவர்கள் கூறும்போது மாணவர்களிடம் தாம்லே தவறாக நடக்க முயற்சி செய்ததாகவும் கூறியுள்ளனர். 
 

Advertisement

(With inputs from PTI)

Advertisement