This Article is From Oct 17, 2018

“பதவி விலகல் போதாது; எம்.ஜே. அக்பர் மீது கிரிமினல் வழக்கு தொடர வேண்டும்”

மத்திய வெளியுறவு இணை அமைச்சர் பதவியில் இருந்து எம்.ஜே. அக்பர் விலகியுள்ள நிலையில் அவருக்கு எதிராக கிரிமினல் வழக்கு தொடர வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி வலியுறுத்தியுள்ளது

“பதவி விலகல் போதாது; எம்.ஜே. அக்பர் மீது கிரிமினல் வழக்கு தொடர வேண்டும்”

எம்.ஜே. அக்பர் தனது அமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்தார்.

New Delhi:

பாலியல் குற்றச்சாட்டுகள் காரணமாக மத்திய வெளியுறவு இணை அமைச்சர் பதவியில் இருந்து எம்.ஜே. அக்பர் இன்று ராஜினாமா செய்துள்ளார். அவர் மீது இன்னும் தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் திலிப் பாண்டே கூறுகையில், “ குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பேற்று வெறும் பதவி விலகல் செய்தால் மட்டும் போதாது. எம்.ஜே. அக்பருக்கு எதிராக கிரிமினல் வழக்குகளை கட்டாயம் தொடர வேண்டும்.

அக்பருக்கு எதிராக புகார் அளித்திருக்கும் 20 வீரம் மிக்க பெண்களை நான் பாராட்டுகிறேன். அவர்கள்தான் அக்பர் பதவி விலகுவதற்கு காரணம். நடத்தை, குணம், ஆளுமை மிக்க அரசாக செயல்படுவோம் என பாஜக கூறி வந்தது. அது எந்த அளவுக்கு உண்மை என்பதை அக்பர் தற்போது வெளிப்படுத்தி விட்டார்” என்று கூறியுள்ளார்.

பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக நெருக்கடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் எம்.ஜே. அக்பர் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். அவர் மீது பெண் பத்திரிகையாளர்கள் பலர் பாலியல் புகாரை அளித்துள்ளனர். முதன் முறையாக தன்மீது பாலியல் புகார் அளித்த பத்திரிகையாளர் பிரியா ரமணி மீது அவமதிப்பு வழக்கை எம்.ஜே. அக்பர் தொடர்ந்திருக்கிறார்.

.