இந்த வீடியோவை ஏராளமானோர் ஷேர்செய்து வருகின்றனர்.
அமெரிக்காவில் முதலை ஒன்று ராணுவ பயிற்சி மையம் அருகே போடப்பட்டிருந்த வேலியை தாண்டி குதித்து, உள்ளே சென்றுள்ளது. இந்த காட்சி இணைய தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தின் ஜாக்ஸன்வில் பகுதியில் செயல்பட்டு வரும் கடற்படை பயிற்சி மையத்தில், இரும்பு வேலி போடப்பட்டுள்ளது. இந்த வேலியை அங்கு வந்த முதலை ஒன்று, மிக சாதாரயமாக ஏறி மறுபக்கம் குதித்துச் சென்றது.
பொதுவாக முதலைகள் நீரில்தான் பலமுள்ளவையாக இருக்கும் என்ற கருத்து நிலவுகிறது. இந்த காட்சியில் இருக்கும் வேலி முதலையின் உயரத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் உள்ளது.
முதலை ஏறிக் குதிக்கும் காட்சியை அங்குவந்த கிறிஸ்டினா ஸ்டீவார்ட் என்பவர் தனது செல்போனில் படம்பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனை ஆயிரக்கணக்கானோர் லைக் ஷேர்செய்து வருகின்றனர். இதற்கு கடற்படை பயிற்சி மையம் பதிவிட்டுள்ள கமென்ட்தான் சுவாரசியமாக இருக்கிறது.
‘எங்கள் பயிற்சி மையத்தில் சில முதலைகள் இருக்கின்றன. நாங்கள் என்னதான் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தாலும் அவைகள் எங்களை மதிப்பதே கிடையாது' என்று கடற்படை பயிற்சி மையம் தரப்பில் கமென்ட் செய்யப்பட்டுள்ளது.
Click for more
trending news