This Article is From Feb 04, 2019

ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத வெள்ளம்... ஊருக்குள் புகுந்த முதலைகள்!

ஆஸ்திரேலியா பருவ காலத்தில் நிறைய மழையை எதிர்கொள்ளும். ஆனால் தற்போதைய வெள்ளம் வரலாறு காணாத வெள்ளமாக உள்ளது.

ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத வெள்ளம்... ஊருக்குள் புகுந்த முதலைகள்!

குயின்ஸ்லாந்து பகுதியில் பல முதலைகள் தெருக்களுக்குள் புகுந்துள்ளன.

Cairns:

ஆஸ்திரேலியாவை சூழ்ந்துள்ள வரலாறு காணாத வெள்ளத்தால் மக்கள் பலர் வீடுகளை இழந்துள்ளனர். நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள பள்ளிகள் மற்றும் விமான நிலையங்கள் ஆகியவை முடங்கியுள்ளன. குயின்ஸ்லாந்து பகுதியில் பல முதலைகள் தெருக்களுக்குள் புகுந்துள்ளன. பாதுக்காப்பு படையினர் மணல் மூட்டைகளை போட்டு தடுத்துள்ளனர். மக்கள் வீடுகளின் கூரைகளின் மேல் ஏறி அமர்ந்திருக்கும் நிலையில் உள்ளனர்.

ஆஸ்திரேலியா பருவ காலத்தில் நிறைய மழையை எதிர்கொள்ளும். ஆனால் தற்போதைய வெள்ளம் வரலாறு காணாத வெள்ளமாக உள்ளது.

அதிகாரிகள் தண்ணீரை ஏரிகளில் திறந்துவிட்டனர். அதோடு இவை அதிக வேகத்தில் பாய்ந்து ஊருக்குள் வரும் என்று எச்சரித்தனர். கார்கள், வாகனங்கள் என அனைத்தும் நீரில் மூழ்கின.

"இப்பகுதியில் இப்படி ஒரு வெள்ளத்தை பார்த்ததே இல்லை" என ரேடியோ ஜர்னலிஸ்ட் ஒருவர் தெரிவித்துள்ளார்.

1100க்கும் அதிகமானோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வேண்டிய மீட்பு பணிகளை செய்ய முடியாத அளவில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. 16,000 பேர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர் என ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.

மணிக்கு 100 கீமீ வேகத்தில் வீசிய காற்று, 10 செமீ மழை என ஆஸ்திரேலியாவை புரட்டி போட்டுள்ளது. விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மக்கள் பழைய நிலைக்கு திரும்ப, மழை விட்டதும் 72 மணி நேரம் எடுக்கும் என்று கூறப்படுகிறது.

.