This Article is From Aug 14, 2018

"எங்களை வழிநடத்துங்கள்" ஸ்டாலினுக்கு திமுக தலைவர்கள் அழைப்பு

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கும் பொருட்டு, திமுகவின் அவசர செயற்குழு கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைப்பெற்றது

Chennai:

சென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கும் பொருட்டு, திமுகவின் அவசர செயற்குழு கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைப்பெற்றது.

செயற்குழு கூட்டத்தில் பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ‘கலைஞர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக நான் எதை இழக்கவும் தயாராக இருந்தேன்’ என்று பேசியுள்ளார். மாநிலத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட திமுக உறுப்பினர்கள், இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இன்று காலை 10 மணி அளவில் தொடங்கிய செயற்குழு கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், திமுக தலைவர் கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்வது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனைகளை நினைவு கூர்ந்தார். “முதல்வரின் கைகளைப் பிடித்து கெஞ்சினேன், ஆனால் மெரினாவில் இடம் அளிக்க மறுத்துவிட்டனர்” என்று அவர் தெரிவித்துள்ளார். செயற்குழு கூட்டத்தில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

tt9mluco

அதனை தொடர்ந்து, “செயல் தலைவரே, எங்களை வழிநடத்துங்கள்” என்று திமுகவை சேர்ந்த துரை முருகன், ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்தார். கடந்த ஓராண்டுகளுக்கும் மேலாக, திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல் நல பாதிப்புகள் இருந்ததால், கட்சி செயல்பாடுகளை ஸ்டாலின் வழிநடத்தி சென்றுள்ளார்.

தற்போது, கருணாநிதியின் மறைவுக்கு பின்னர், திமுகவின் தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்பார் என்று திமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், திமுகவில் இருந்து நீக்கப்பட்ட கருணாநிதியின் மகன் மு.க அழகிரி, மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அப்போது “தமிழகத்தில் உள்ள கருணாநிதியின் உண்மையான உடன்பிறப்புகள் என் பக்கம் உள்ளனர்” என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

.