This Article is From Sep 21, 2020

ராஜ்யசபாவில் கடும் அமளிகளுக்கு இடையே வேளாண் மசோதா நிறைவேற்றம்! சபை தலைவர் மைக் உடைக்கப்பட்டதால் பரபரப்பு!

வேளாண் மசோதவுக்கு எதிராக ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சி எம்பிகள் கடும் எதிர்பு தெரிவித்தனர்

ராஜ்யசபாவில் கடும் அமளிகளுக்கு இடையே வேளாண் மசோதா நிறைவேற்றம்! சபை தலைவர் மைக் உடைக்கப்பட்டதால் பரபரப்பு!

ராஜ்ய சபாவில்கடும் அமளிகளுக்கு இடையே வேளாண் மசோதா நிறைவேற்றப்பட்டது

New Delhi:

ராஜ்யசபாவில் இன்று வேளாண் மசோதா தாக்கல் செய்வதற்கு எதிர்கட்சிகள் கடும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இறுதியாக கடும் அமளிகளுக்கு இடையே வேளாண் மசோதா நிறைவேற்றப்பட்டது. 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் மசோதாக்களுக்கு எதிர்கட்சிகள், விவசாய சங்கங்கள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். முன்னதாக லோக்சபாவில் இந்த மசோதக்கள் நிறைவேற்றப்பட்டது. அப்போது அதற்கு ஆதரவு அதிமுக ஆதரவு தெரிவித்திருந்தது. 

இந்த நிலையில், ராஜ்யசபாவில் வேளாண் மசோதா தாக்கல் செய்வதாக இருந்தது. இதற்கு ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சி எம்பிகள் கடும் எதிர்பு தெரிவித்தனர். ஒரு கட்டத்தில்  திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன், சபை தலைவரின் இருக்கைக்கு அருகில் சென்று வேளாண் மசோதாவின் நகலை கிழித்து எறிந்தார்.  வேளாண் மசோதா நிறைவேற்றக்கூடாது என்று கூச்சலிட்டார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சபை தலைவரின் மைக் உடைக்கப்பட்டது. 

இறுதியாக கடும் அமளிகளுக்கு இடையே வேளாண் மசோதா ராஜ்ய சபாவில் நிறைவேற்றப்பட்டது. சபை தலைவரின் மைக் உடைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எதிர்கட்சியினரின் ஆர்ப்பாட்டத்தால் இன்று அவை முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.

.