This Article is From Jan 05, 2019

கேரளாவில் பதற்றம்:மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., பாஜக எம்.பி. வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு

சபரிமலை விவகாரத்தில் ஏற்பட்டுள்ள வன்முறையின் தொடர்ச்சியாக அரசியல் கட்சி தலைவர்களின் வீடுகளில் தாக்குதல் நடந்துள்ளது.

தாக்குதல் நடத்தப்பட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. ஷம்சீரின் வீடு

Thiruvananthapuram:

கேரளாவில் பாஜக எம்.பி. மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. ஆகியோரது வீடுகளில் நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டிருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்றிரவு இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

பாஜக எம்.பி. வி. முரளிதரன் கண்ணூர் மாவட்டம் தலச்சேரியில் உள்ள தனது இல்லத்தில் குடும்பத்தினருடன் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் அவரது வீட்டிற்குள் நாட்டு வெடிகுண்டுகளை வீசிச் சென்றுள்ளனர்.

இருப்பினும் இதனால் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. இந்த தாக்குதலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே காரணம் என்று முரளீதரன் குற்றம்சாட்டியுள்ளார். இந்த சம்பவம் நடப்பதற்கு முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸிட் கட்சி எம்.எல்.ஏ. ஷம்சீரின் விட்டில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. அவரது வீடும் தலச்சேரியில்தான் உள்ளது.

இந்த தாக்குதலுக்கு பாஜக அல்லது ஆர்.எஸ்.எஸ். அமைப்பே காரணம் என்று ஷம்சீர் குற்றம்சாட்டியுள்ளார். இந்த இரு தாக்குதல் சம்பவம் தொடர்பாக மொத்தம் 20 பேர் கைதாகி உள்ளனர்.

சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இதில் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து பதற்றம் அதிகரித்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாகத்தான் அரசியல் தலைவர்கள் வீடுகளில் தாக்குதல் நடந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சபரிமலை போராட்டம் - வன்முறை தொடர்பாக இதுவரைக்கும் 801 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

.