বাংলায় পড়ুন Read in English
This Article is From Nov 22, 2018

சி.பி.எஸ்.சி ஆசிரியர் தகுதித்தேர்விற்கான நுழைவுச் சீட்டு வெளியீடு ! முழு விபரங்கள் உள்ளே

சி.பி.எஸ்.சி நடத்தும் ஆசிரியர்களுக்கான மத்திய தகுதித்தேர்வு (சி.டி.இ.டி) (Central Teacher Eligibility Test) வரும் டிசம்பர் மாதம் 9-ம் தேதி நாடு முழுவதும் உள்ள 92 நகரங்களில் 2296 மையங்களில் நடக்கவுள்ளது

Advertisement
Jobs
New Delhi:

சி.பி.எஸ்.சி நடத்தும் ஆசிரியர்களுக்கான மத்திய தகுதித்தேர்வு (சி.டி.இ.டி) (Central Teacher Eligibility Test) வரும் டிசம்பர் மாதம் 9-ம் தேதி நாடு முழுவதும் உள்ள 92 நகரங்களில் 2296 மையங்களில் நடக்கவுள்ளது. இந்நிலையில் தேர்வுக்கான நுழைவு அட்டையை சி.பி.எஸ்.சியின் இணையத்தளத்தில் www.ctet.nic. இருந்து நாளை முதல் (22.11.18) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தேர்வு ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் நுழைவு அட்டையில் இடம்பெற்றுள்ள தேர்வுக்கான தகவல்களை கவனமாக படித்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள தடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்துவர வேண்டாம் என தேர்வு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

நுழைவு அட்டையில் தேர்வு எழுதுபவரின் புகைப்படம், கையொப்பம் போன்ற அனைத்து தகவல்களும் அடங்கியிருக்கும் எனவும், தேர்வு நுழைவு அட்டையை இணையதளத்திலிருந்து பதிவிறக்க இயலவில்லை என்றால் வரும் நவம்பர் 30 க்குள், தேர்வுக்கான கட்டண ரசீதுடன் சி.டி.இ.டி குழுக்கு தெரிவிக்கவேண்டும் என சி.பி.எஸ்.சி. தேர்வாணையம் தெரிவித்தது.

Advertisement

அனுமதி அட்டையை தேர்வின்போது சமர்பிக்காத நபர்களை ஒருபோதும் தேர்வு எழுத அனுமதிக்க முடியாது என்றும், தேர்வு சரியாக குறிப்பிட்டுள்ள சமயத்தில் நடைபெரும் எனவும் தெரிவித்தனர்.

டிசம்பர் 9-ம் தேதி நடக்கவிருக்கும் இந்தத் தேர்வில், காலை 9.30 முதல் மதியம் 12.00 வரை இரண்டாவது தாளுக்கான தேர்வும். முதல் தாளுக்கான தேர்வு மதியம் 2.00 மணியிலிருந்து மாலை 4.30 வரைக்கும், நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
Advertisement