This Article is From Jul 30, 2019

22 நாட்களில் வெளியான சிடெட் (CTET) தேர்வு முடிவுகள்! - 3.52 லட்சம் பேர் தேர்வு!

சிடெட் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வர்கள் தங்களது முடிவுகளை அதன் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் சென்று தற்போது பார்க்கலாம்.

22 நாட்களில் வெளியான சிடெட் (CTET) தேர்வு முடிவுகள்! - 3.52 லட்சம் பேர் தேர்வு!

14 லட்சம் தேர்வர்கள் தேர்வு எழுதினர்.

New Delhi:


மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி அனைத்து வகை பள்ளிகளிலும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக பணிபுரிய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தமிழகத்தில் ஆசிரியர் பணிக்காக மாநில அரசின் சார்பில் டெட் தேர்வு நடத்தப்படுகிறது. இதேபோல், மத்திய அரசின் பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் ஆசிரியராக பணியில் சேர சி-டெட் என்ற மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.  

அதன்படி, நடப்பு ஆண்டுக்கான சிடெட் தேர்வு நாடு முழுவதும் கடந்த ஜூலை 8 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வினை எழுத 21 லட்சம் தேர்வர்கள் விண்ணப்பித்த நிலையில், 14 லட்சம் தேர்வர்கள் தேர்வு எழுதினர். இந்த தேர்வுக்கு கடந்த சில ஆண்டுகளில் அதிகளவிலான எண்ணிக்கையில் தேர்வர்கள் பங்கேற்ற இதுவே முதல்முறையாகும். 

இந்நிலையில், நடந்து முடிந்த இந்த மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. தேர்வர்கள் முடிவுகளை அதன் அதிகாரப்பூர்வ இணையதளமான cbseresults.nic.in. என்ற இணையத்தில் காணலாம். 

இதேபோல், தேர்வர்கள் தங்கள் சான்றிதழை டிஜிட்டல் வடிவத்தில், டிஜிலாக்கர் அக்கவுண்டில் பெற்றுக்கொள்ளலாம். இந்த சிடெட் தேர்வு சான்றிதழ் 7 வருடங்களுக்கு செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Click here for more Jobs News

.