This Article is From Sep 05, 2018

கடலூரில் இளைஞர் தற்கொலை ; ப்ளூ வேல் தான் காரணமா?

தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் செல் போன், அறையில் இருந்த திகிலூட்டக்கூடிய புத்தகங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Advertisement
தெற்கு Posted by

கடலூர்: பன்ருட்டியில் 22 வயது பொறியியல் பட்டதாரி தற்கொலை செய்துள்ள சம்பவம் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. ப்ளூ வேல் எனப்படும் விளையாட்டினால் தற்கொலை நடந்துள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது

கடந்த வெள்ளிக்கிழமை இரவு, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த சேஷாத்ரி என்ற இளைஞர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் செல் போன், அறையில் இருந்த திகிலூட்டக்கூடிய புத்தகங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதனால், ப்ளூ வேல் சாலன்ஜ் விளையாட்டினால் தற்கொலை நடைப்பெற்றிருக்க வாய்ப்புகள் உண்டு என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்

ப்ளூ வேல் விளையாட்டில் பங்கெடுப்பவர்களுக்கு விளையாட்டின் ஒரு நிலையில் இருந்து அடுத்த நிலைக்குச் செல்ல, இரக்கமற்ற கொடூரமான காணொளிகளை பார்ப்பது, திகிலூட்டும் திரைப்படங்களை பார்க்கச் சொல்வது போன்ற நேரடியான நிபந்தனைகள் வைக்கப்படுகிறது. உச்சக்கட்டமாக தற்கொலை செய்து கொள்வதும் இதில் ஒதுக்கப்படும் ஒரு பணியே எனக் கூறப்படுகிறது.
 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement