This Article is From Apr 15, 2020

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 1,56,314 வாகனங்கள் பறிமுதல்; அபராத வசூல் எவ்வளவு தெரியுமா?

அந்தவகையில், தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக கடந்த 24 மணி நேரத்தில் 9913 கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 1,97,536 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 1,56,314 வாகனங்கள் பறிமுதல்; அபராத வசூல் எவ்வளவு தெரியுமா?

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 1,56,314 வாகனங்கள் பறிமுதல்; அபராத வசூல் எவ்வளவு தெரியுமா?

ஹைலைட்ஸ்

  • ஊரடங்கை மீறியதாக 1,56,314 வாகனங்கள் பறிமுதல்
  • இதுவரை 1,97,536 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்
  • இதுவரை ரூ.82,32,644 அபராதம் வசூல்

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 1,56,314 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அபராதமாக ரூ.82,32,644 பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் கடந்த மாதம் 25-ம்தேதி முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. எனினும், இந்த இடைப்பட்ட நாட்களில் வைரஸ் கட்டுக்குள் வரவில்லை.

இதையடுத்து நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி மே.3ம்தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பதாகவும், மக்கள் இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 38 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக 1,076 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, மொத்தமாக பாதிப்பு எண்ணிக்கை 11,400 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

இதேபோல், தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 31 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 1,204 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், பொதுமக்கள் வெளியை வராத வண்ணம் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவசியமின்றி வெளியே சுற்றித்திரியும் பொதுமக்களுக்கு மீது நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர்.

அந்தவகையில், தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக கடந்த 24 மணி நேரத்தில் 9913 கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 1,97,536 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும், ஊரடங்கு உத்தரவை மீறியதாக 1,56,314 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதேபோல், ஊரடங்கு உத்தரவை மீறியவர்களிடமிருந்து ரூ.82,32,644 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது. 

.