2.39 கிலோ எடை இருந்த தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது (Representational)
New Delhi: டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் டாய்லெட்டில் ரூ.79 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு 21 வயது மதிப்புடைய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அபுதாபியில் இருந்து வந்த விமானத்தில் இந்த பயணி வந்ததாகத் தெரிகிறது. அந்த இளைஞர் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
பயணி ஒருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் டாய்லெட்டில் மறைக்கப்பட்டிருந்த தங்கத்தினை பறிமுதல் செய்துள்ளோம்.
இதில் 20 தங்கக் கட்டிகள், சுமார் 2.39 கிலோ எடை இருந்த தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.