বাংলায় পড়ুন Read in English
This Article is From Oct 04, 2018

‘பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு ரூ. 10 வரை குறைக்க வேண்டும்‘- மம்தா பானர்ஜி

நாட்டு மக்களின் நலனில் மத்திய அரசு அக்கறை காட்டவில்லை என்று மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

Advertisement
இந்தியா Posted by (with inputs from PTI)

கடந்த மாதம் பெட்ரோல், டீசல் விலையில் ரூ.1-யை குறைத்தது மேற்குவங்க அரசு

Siliguri :

பெட்ரோல் விலையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என நாடு முழுவதும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இந்த நிலையில், எரிபொருள் விலையில் ரூ. 2.50-யை குறைத்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்பின்னர் மாநில அரசுகள் தங்களது வாட் வரியை குறைத்து, பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு வலியுறுத்தியது.

இந்த நிலையில் எரிபொருள் விலை குறைப்பு குறித்து பேட்டியளித்த மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, எரிபொருள் விலையை குறைந்தது ரூ. 10-ஆவது குறைத்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டு மக்களின் நலனில் மத்திய அரசுக்கு அக்கறை இல்லை. பாஜக என்கிற கட்சியின் நலனில் மட்டுமே மத்திய அரசு அக்கறையுடன் செயல்படுகிறது என்று குற்றம்சாட்டினார்.

பாஜக ஆட்சி செய்யும் மத்திய பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், அசாம் உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் எரிபொருள் விலையை குறைத்து மாநில அரசுகள் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.
 

Advertisement
Advertisement