This Article is From Nov 15, 2018

இந்த குழந்தைகள் தினத்தில் அனைவரையும் சிரிக்க வைத்த ஸிவா (ziva)

“குழந்தைகளின் விளையாட்டுகளிலேயே அழகானது அவர்கள் உணவை உன்ன ஏமாற்றுவதுதான்’’

இந்த குழந்தைகள் தினத்தில் அனைவரையும் சிரிக்க வைத்த ஸிவா (ziva)

தோனியின் மகள் ஸிவாவும்‌ (Ziva) சக வீரர் ஹர்பஜன் சிங்கின் மகளான ஹினாயாவும் (Hinaya) விளையாடும் வீடியோ காட்சி.

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் நடந்து வந்த நிலையில் சமூக ஊடகங்களிளும் கொண்டாட்டங்கள் அதிகமாகவே இருந்து. பிரபலங்களும் இன்ஸ்டாகிராமில் தங்களது சிறுவயது புகைப்படங்களை வெளியிட்டு அவர்களும் சிறு குழந்தைகளாய் மாறினர்.

சமூக ஊடகங்களிளும் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பல வீடியோக்கள் வெளியான நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ட்விட்டர் பக்கத்தில் கேப்டன் தோனியின் மகள் ஸிவாவும்‌ (Ziva) சக வீரர் ஹர்பஜன் சிங்கின் மகளான ஹினாயாவும் (Hinaya) விளையாடும் வீடியோ காட்சிகளும் வெளியானது. 

மேலும் அந்த வீடியோ காட்சியில் மஞ்சள் நிற பந்துகளால் ஸிவா  மற்றும் ஹினாயாவும் சூழப்பட்ட நிலையில் ஸிவா புத்திசாலி தனமாக தனது உணவை சாப்பிட்டாமல் தப்பித்து கொண்டே இருந்தார். 

இந்த குறும்புத்தனமான செயலால் இணையத்தில் ஸிவாவின் வீடியோவுக்கு அதிகபடியான ரசிகர்கள் குவிந்தனர்.
“குழந்தைகளின் விளையாட்டுகளிலேயே அழகானது அவர்கள் உணவை உன்ன ஏமாற்றுவதுதான்'' என்ற தலைப்புடன் ‘விசில் போடு' மற்றும் ‘சூப்பர் சிங்க்குட்டிகள்'' என்னும் ஹேஷ் டேகிளும் பதிவிட்டனர்.

 

சமூக ஊடகங்களில் பதிவிட்டதால் இந்த வீடியோவுக்கு 2,000 லைக்குகள் கிடைத்த

 மேலும் கிரிகேட் வீரர் ஹர்பஜன் சிங் தனது மகள் ஹினாயாவின் வீடியோவையும் வெளியிட்டார். அதில் அவர் '' நாம் வளர்ந்த பிறகே குழந்தைகளாக இருப்பது எவ்வளவு சுகம் என்பது புரியும்'' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

 

Click for more trending news


.