ஓடிசாவின் கட்டாக் பகுதியில் மஹாநதி ஆற்றுப்பாலத்திலிருந்து பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
New Delhi: நேற்று ஓடிசாவின் மஹாநதி ஆற்றுப்பாலத்திலிருந்து பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர். அவர்களின் இறப்பிற்கு இன்று பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.
கட்டாக்கில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் தனது உறவுகளை இழந்து தவிப்பவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று பிரதமரின் டிவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
தால்சீர் பகுதியிலிருந்து கட்டாக்கிற்கு சென்று கொண்டிருந்த பேருந்து மஹாநதி ஆற்றுப்பாலத்திலிருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் பேருந்தில் பயணித்த 30 பயணிகளும் ஆற்றிற்குள் விழுந்தனர்.