நெதர்லாந்தில் உள்ள ரயில் பாதையை கடக்க முயன்ற போது நூலிழையில் உயிர் தப்பிய இளைஞர்
கடந்த சில மாதங்களுக்கு முன் நெதர்லாந்தில் உள்ள கீலீன் நகரில் சைக்கிளை ஓட்டிச் சென்ற நபர் ஒருவர் அங்கிருந்த ரயில் பாதையை கடக்க முயன்ற போது நூலிழையில் உயிர் தப்பிய வீடியோ காட்சி சமீபத்தில் இணையதளங்களில் வைரல் ஆனது.
இச்சம்பவம் நடந்தேறி சில மாதங்கள் ஆகிய நிலையில் நெதர்லாந்து ரயில்வே நிர்வாகம் சார்பில், கவனக்குறைவாக ரயில் பாதையை கடப்பதன் ஆபத்துக்களை பற்றிய விழிப்புணர்வு வீடியோ பதிவை வெளியிட்டனர்.
இந்நிலையில் அந்த வீடியோ காட்சியில் சைக்கிள் ஓட்டுனர் ஒருவர் ரயில் பாதையை கடக்க முயன்ற போது தூரத்தில் ரயில் ஒன்று வந்து கொண்டிருந்ததை பார்த்தார்.
விரைவாக வந்த அந்த ரயில் சென்ற பிறகு பாதையை அவசரமாக கடக்க முயன்ற போது அருகே இருந்த மற்ற தண்டவாளத்தில் வந்துகொண்டிருந்த ரயிலை அந்த இளைஞர் கவனிக்க தவறிவிட்டார்.
அப்போது வேகமாக வந்த மற்றொரு ரயிலிடமிருந்து நூலிழை இடைவெளியில் இளைஞர் உயிர் தப்பினார். இளைஞனைப் போல் மக்கள் ஆபத்தான செயல்களில் ஈடுபட வேண்டாம் என ரயில் நிர்வாகம் சார்பில் அந்த வீடியோ பதிவில் தெரிவிக்கப்பட்டது.
யூ டூயூப் தளத்தில் கடத்த வாரம் வெளியான இந்த வீடியோ பதிவு இதுவரை சுமார் 8 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
மேலும் அந்த பதிவில் காவலர்கள் இல்லாத ரயில்வே கிராசிங் நெதர்லாந்தில் உள்ளதாகவும் அது உடனடியாக சீர் செய்யப்படும் என ரயில் நிர்வாகம் சார்பாக வெளியிடப்பட்டது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)Click for more
trending news